ஆதார் என்பது 12 இலக்க எண் கொண்ட ஒரு அடையாள அட்டையாகும். இது வெறும் அடையாள ஆவணம் மட்டுமல்ல; பணம் தொடர்பான நிறைய விஷயங்களில் ஆதார் கார்டின் முக்கியத்துவம் உள்ளது. எனவே ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் எப்போதுமே அப்டேட்டாக இருக்க வேண்டும். இந்த ஆதார் கார்டில் நிறைய நன்மைகள் உள்ளன. அதில் மிக முக்கியமான ஒன்றுதான் பேலன்ஸ் பார்ப்பது.
பேலன்ஸ் பார்ப்பது எப்படி?
- உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து *99*99*1# என்ற நம்பருக்கு டயல் செய்ய வேண்டும்.
- 12 இலக்க ஆதார் எண்ணைப் பதிவிட வேண்டும். அதன் பின்னர் ஆதார் சரிபார்ப்பு நடைபெறும்.
- இப்போது உங்களுடைய மொபைல் நம்பருக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வரும். இது ஆதார் அமைப்பு (UIDAI) மூலமாக அனுப்பப்படும்.
- இந்த எஸ்.எம்.எஸ்ஸில் வங்கிக் கணக்கு பேலன்ஸ் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். அதில் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.
புதிய வசதி!
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு நிறைய அப்டேட்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கினறன. அதில் மிக முக்கியமான ஒன்று டோர்ஸ்டெப் சேவை. அதாவது, வாடிக்கையாளரின் வீட்டுக்கே வந்து மொபைல் நம்பர் திருத்தம் உள்ளிட்ட அப்டேட்களைச் செய்ய வேண்டும். இத்திட்டம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும் படிக்க
எச்சரிக்கை வேண்டும்: மின்சார கட்டணம் குறித்து முக்கிய அறிவிப்பு!
Share your comments