இந்தியாவில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஆனது ஊழியர்களுக்கு ஓய்வூதிய தொகை உள்ளிட்ட பல்வேறு பலன்களை வழங்கி வருகிறது. தற்போது PF சந்தாதாரர்கள் சில காரணங்களுக்காக PF தொகையை 5 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தால் TDS செலுத்த வேண்டும். தற்போது இந்த TDS செலுத்தும் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஓய்வூதிய தொகை (Pension Scheme)
இந்தியாவில் ஊழியர்களுக்கு பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு பலன்கள் கிடைக்கிறது. மேலும் உங்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கின் இருப்பை நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் முறையில் சரிபார்க்கலாம். உங்களின் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு ‘EPFOHO UAN’ என்று டைப் செய்து SMS அனுப்புவதன் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
இதில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, கன்னடம், பெங்காலி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் விவரங்களை பெறலாம். இதே போல் 9966044425 என்ற எண்ணிற்கு Missed Call கொடுப்பதன் மூலமாகவும் உங்களின் இருப்புத் தொகையை குறித்த விவரங்களை பெறலாம். இதையடுத்து PF சந்தாதாரர்கள் சில காரணங்களுக்காக PF தொகையை 5 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தால் TDS செலுத்த வேண்டும். இதில் PF கணக்குடன் பான் கார்டு இணைக்கவில்லையெனில் 30 சதவீதம் TDS செலுத்த வேண்டும்.
தற்போது வெளியான பட்ஜெட்டில் இது தொடர்பான விதிமுறையில் முக்கிய மாற்றம் குறித்த அறிவிப்பை நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார். இதில் PF கணக்குடன் பான் கார்டு இணைக்கவில்லையெனில் 30 சதவீதம் TDS செலுத்துவதற்கு பதிலாக 20 சதவீதம் செலுத்தினால் போதும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த விதிமுறையானது வருகிற ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: உயரப் போகும் சம்பளம்!
பென்சன், LIC, PF பணத்தை இதில் முதலீடு செய்ய மத்திய அரசு திட்டம்!
Share your comments