இந்தியாவில் அரசு ஊழியர்களை போல தனியார் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களும் ஓய்வு காலத்திற்கு பிறகு ஓய்வூதியம் பெறும் நோக்கில் EPS திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது இத்திட்டத்தின் முக்கிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் (Pension)
இந்தியாவில் EPFO வின் ஓய்வூதிய திட்டமானது அரசு ஊழியர்களை போல தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் ஓய்வுக்கு பிறகு மாதந்தோறும் ஓய்வூதியத் தொகையை வழங்குகிறது. ஒவ்வொரு EPFO ஊழியரும் EPS திட்டத்தில் உறுப்பினராகிறார். இதன் கீழ் ஓய்வூதியம் பெற விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து இருக்க வேண்டும்.
அத்துடன் EPFO மற்றும் EPS திட்ட உறுப்பினராகவும் இருக்க வேண்டியது கட்டாயம். மேலும் அந்த நபர் பணி ஓய்வு பெற்ற பிறகு அவர் 58 வயதை எட்டும் போது மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த ஓய்வூதிய தொகையானது ஊழியரின் மாத சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும். மேலும் ஓய்வூதியத் தொகையானது அவரின் சேவை காலம், மாத ஊதியம் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
மேலும் ஊழியர்களின் சம்பளத்தில் 8.33% ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஒரு வேலை ஊழியர்கள் ஒருவர் ஒரு நிறுவனத்தில் பத்து வருடங்களுக்கு தனது சேவையை தொடர முடியாவிட்டால் அவர் தனது 58 – வது வயதில் 10C என்ற படிவத்தை பூர்த்தி செய்து தனது முழுத் தொகையையும் திரும்பப் பெறலாம். அத்துடன் EPS திட்டத்தில் இருந்து குறைந்தபட்ச தொகையை பெற விரும்பினால் 50 வயதை எட்டியிருக்க வேண்டும்.
மேலும் படிக்க
புதுசா முதலீடு செய்பவரா நீங்கள்? எதுல முதலீடு பண்ணா அதிக லாபம் வரும்!
Share your comments