1. மற்றவை

வெப்பத்தை குறைக்க பசுமை இல்லம் அமைத்த வங்கிப் பணியாளர்!

R. Balakrishnan
R. Balakrishnan

Green House

உத்தர பிரதேசத்தில் ஓய்வு பெற்ற வங்கி பணியாளர் ஆயிரம் செடிகளுடன் மாசுபாடு இல்லாத பசுமை இல்லம் ஒன்றை உருவாக்கி உள்ளார். லக்னோ, உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் ஷாகஞ்ச் பகுதியில் வசித்து வருபவர் சந்திரசேகர் சர்மா. வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். ஆனால், பணி ஓய்வுக்கு பின் அவர் மேற்கொண்ட முயற்சி பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அவர் 6,300 சதுர அடி பரப்பளவில் 400 வகையான ஆயிரம் செடி, கொடிகளை வளர்த்து வருகிறார். பூக்கள், கனிகள் காய்த்து குலுங்குகின்றன.

பசுமை இல்லம் (Green House)

300 ஆண்டுகள் பழமையான அவரது வீடு, மாசுபாடு இல்லாத, பசுமை இல்லம் ஆக உருவாகி உள்ளது. இதனால் கவரப்பட்ட அக்கம் பக்கம் வசிப்பவர்கள் உள்ளிட்ட உள்ளூர்வாசிகள் பலர் இவரது வீட்டுக்கு வந்து பார்வையிட்டு செல்கின்றனர். ஜப்பான், ஜெர்மனி மற்றும் வங்காளதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாவாசிகள் வந்து செல்கின்றனர்.

இதுபற்றி சந்திரசேகர் கூறும்போது, மாசுபாடு இல்லாத ஒரு பசுமை இல்லம் உருவாக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. இதற்காக 40 ஆண்டுகளாக திட்டங்களை சேகரித்து வந்தேன். தற்போது மொத்தம் 400 வகையான செடிகள் உள்ளன. என்னுடைய வீட்டின் வெப்பநிலை, மற்ற வீடுகளில் உள்ள வெப்பநிலையை விட 5 டிகிரி குறைவாக இருக்கும். காற்று தர குறியீடும் வெளியிடங்களில் உள்ள அளவை விட நன்றாக உள்ளது.

அவரது பசுமை இல்லம் மாதிரியை நகர் முழுவதும் 50 வீடுகளில் அமைக்கவும் அவர் உதவியுள்ளார். செடி, கொடிகள் மற்றும் மரங்களை எனது குழந்தைகள் போன்று நேசிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். என்னுடைய வீட்டில் ஏறக்குறைய காலியாக கிடந்த அனைத்து பகுதிகளிலும் செடிகளை வளர்த்து வருகிறேன். என்னுடைய செடிகள் தற்போது பூக்க தொடங்கி உள்ளன. கனிகள் தருகின்றன. காய்கறிகளும் வளர்ந்து வருகின்றன என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

அதிக மகசூல் தரும் வியட்நாம் பலாப்பழம்: வீட்டிலேயே வளர்க்கலாம்!

கஞ்சா வளர்க்க இந்த நாட்டில் தடையில்லை: அதிரடி அறிவிப்பு!

English Summary: Bank employee sets up greenhouse to reduce heat!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.