1. மற்றவை

வங்கி FD vs அஞ்சலக TD: எங்கு வட்டி அதிகம்! எது பெஸ்ட்!

R. Balakrishnan
R. Balakrishnan
Bank vs Post Office

இன்றைய காலகட்டத்தில் வங்கிகளில் வட்டி விகிதம் அதிகமா? அஞ்சலகத்தில் வட்டி விகிதம் அதிகமா? எங்கு வட்டி விகிதம் அதிகம்? எது முதலீட்டாளர்களுக்கு அதிக நன்மையை கொடுக்கும் வாருங்கள் பார்க்கலாம். அஞ்சலகத்தில் ஜனவரி 1, 2023 முதல் வட்டி விகிதம் 7% ஆக வழங்கப்படுகின்றது. வங்கிகளில் 5 ஆண்டுகால திட்டம் எனும்போது 6.6% ஆக வட்டி கிடைக்கிறது.

அஞ்சலகத்தில் என்ன வட்டி?

அஞ்சலகத்திலும் வங்கிகளில் உள்ளதைபோல டெர்ம் டெபாசிட்கள் இருந்தாலும், காலம் என்பது 1 ஆண்டில் இருந்து தொடங்கி, 5 ஆண்டு திட்டம் வரையில் உள்ளது.

  • 1 ஆண்டு டெபாசிட் - 6.6%
  • 2 ஆண்டு டெபாசிட் - 6.8%
  • 3 ஆண்டு டெபாசிட் - 6.9%
  • 5 ஆண்டு டெபாசிட் - 7%

எஸ்பிஐ-ல் என்ன விகிதம்?

எஸ்பிஐயில் 7 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான திட்டம் என்பது உள்ளது. இதற்கு 3% முதல் 7.1% வரையில் வட்டி வழங்கப்படுகின்றது. இதில் மூத்த குடிமக்கள் 50 அடிப்படை புள்ளிகள் அதிகம் வட்டியினை பெறலாம். இந்த திட்டத்திற்கு கடந்த பிப்ரவரி 15, 2023 அன்று வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டது.

  • 7 நாள் முதல் 45 நாட்கள் வரையில் - 3%
  • 46 நாள் முதல் 179 நாட்கள் வரையில் - 4.5%
  • 180 நாள் முதல் 210 நாட்கள் வரையில் - 5.25%
  • 211 நாட்கள் முதல் 1 ஆண்டுக்குள் - 5.75%
  • 1 வருடம் முதல் 2 வருடத்திற்குள் - 6.8%
  • 400 நாள் - 7.10%
  • 2 வருடம் முதல் 3 வருடத்திற்குள் - 7%
  • 3 வருடம் முதல் 5 வருடம் வரையில் - 6.5%
  • 5 வருடம் முதல் 10 வருடம் வரையில் - 6.5%

எது பெஸ்ட்?

வங்கிகள் எனும்போது குறிப்பிட்ட இடங்களில் மட்டும் கிளைகளை கொண்டுள்ளன. அதேசமயம் அஞ்சலகங்கள் கிராமப்புற பகுதிகளில் கூட சேவையை கொடுக்கின்றன. அதோடு வங்கிகளை காட்டிலும் அஞ்சலகத்தில் வட்டி சற்றே அதிகம் எனலாம். அஞ்சலகத்தில் 5 ஆண்டு டெபாசிட் திட்டத்திற்கு 7% வட்டி கிடைக்கிறது. இதே எஸ்பிஐ-யில் 5 - 10 ஆண்டுகளுக்கே 6.5% தான் வட்டி கிடைக்கிறது. ஆக வருமான வகையில் அஞ்சலகத்திலேயே வட்டி அதிகம்.

மேலும் படிக்க

ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: உடனே தெரிந்து கொள்ளுங்கள்!

PF பயனர்களுக்கு பங்களிப்புத் தொகை அளிக்கவில்லை எனில் நிறுவனங்களுக்கு அபராதம்!

English Summary: Bank FD vs Post Office TD: Where is the interest higher! Which is the best! Published on: 21 February 2023, 08:14 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.
News Hub