1. மற்றவை

வங்கிக் கடனுக்கு இனி அந்த வட்டி கிடையாது- ரிசர்வ் வங்கி உத்தரவு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Bank loan no longer has that interest

கடன் வாங்காமல் காலத்தை ஓட்டுவது என்பது மிகவும் சவால் மிகுந்தது. இக்கட்டானக் காலங்களில் நமக்கு கையில் இருக்கும் பணம் போலக் கைகொடுப்பது கடன்தான். ஏன், இந்த காலத்தில், நம் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்ய இஎம்ஐ தான் ஆபத்தாண்டவன்.

தேவையின்போது கடனை வாங்கிவிட்டு எப்போதுதான் இந்த இஎம்ஐ முடியுமோ எனக் காத்திருப்பவர்கள்தான் ஏராளம்.  அப்படி வாங்கியக் கடனைத் திரும்பச் செலுத்தத் தவறும்பட்சத்தில்,  அபராத வட்டி  வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் வங்கி கடன் வாங்கியோருக்கு அபராத வட்டி விதிக்கக்கூடாது என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.இதனால், வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட கடன்களை வாங்கியோர் எப்படி பயனடைவார்கள் என்பதை பார்க்கலாம்.

கட்டணம் மட்டும்

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடனை ஒழுங்காக செலுத்தாதவர்களுக்கு வட்டி விதிக்கப்படக்கூடாது எனவும், அதற்கு பதிலாக அபராதக் கட்டணம் (Penal charges) மட்டுமே விதிக்கப்பட வேண்டும் என வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

ரிசர்வ் வங்கி உத்தரவு

இதுகுறித்து பிப்ரவரி 8ஆம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள உத்தரவில், கடன் வாங்கிய நபர் கடனை செலுத்துவதில் தாமதம் செய்தாலும், விதிமுறைகளுக்கும், கடன் ஒப்பந்தத்தின் நிபந்தனைகளுக்கும் இணங்காமல் செயல்பட்டாலும் அவருக்கு ‘அபராதக் கட்டணம்’ மட்டுமே விதிக்க வேண்டும் எனவும், ‘அபராத வட்டி’ விதிக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

அசலுடன் சேர்க்கக்கூடாது

இந்த அபராத கட்டணத்தை வாடிக்கையாளரிடம் இருந்து தனியாக மட்டுமே வசூலிக்க வேண்டும். வாடிக்கையாளர் பெற்ற கடன் அசல் தொகையுடன் அபராதக் கட்டணத்தை இணைத்து வசூலிக்கக்கூடாது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஏன் இந்த மாற்றம்?

கடன் வாங்கியோர் ஒழுங்காக கடனை திருப்பிச் செலுத்த வைப்பதற்காகவே அபராத வட்டி முறை கொண்டுவரப்பட்டது. ஆனால், வங்கிகளோ அதிக வருமானம் ஈட்டுவதற்காக அபராத வட்டியை அதிகளவில் விதித்து பணம் வசூலித்தன. இதுகுறித்து ரிசர்வ் வங்கியிடம் புகார்கள் குவிந்தன.

மேலும் படிக்க...

முக்திக்கான பாதையின் வழிகாட்டியாகத் திகழ்கிறார் சிவன்!

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000!- விபரம் உள்ளே

English Summary: Bank loan no longer has that interest.. RBI order!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.