ஜூலை மாதத்திற்கான வங்கிகள் விடுமுறை நாட்கள் குறித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 7 நாட்கள் வங்கி விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ விடுமுறை பட்டியலில், பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகை நாட்கள் மற்றும் 6 வழக்கமான வார விடுமுறைகளுடன் சேர்ந்து மொத்தம் ஒன்பது நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள் :
4 ஜூலை 2021 - ஞாயிறுக்கிழமை
10 ஜூலை 2021 - 2வது சனிக்கிழமை
11 ஜூலை 2021 - ஞாயிறுக்கிழமை
12 ஜூலை 2021 - திங்கள் - காங் (ராஜஸ்தானில் விடுமுறை), ரத் யாத்திரை (புவனேஸ்வரில் விடுமுறை)
13 ஜூலை 2021 - செவ்வாய் - பானு ஜெயந்தி/தியாகிகள் தினம் - (ஜம்மு & காஷ்மீர், சிக்கிமில் விடுமுறை)
18 ஜூலை 2021 - ஞாயிறுக்கிழமை
21 ஜூலை 2021 - செவ்வாய் - பக்ரீத் பண்டிகை (நாடு முழுவதும் விடுமுறை )
24 ஜூலை 2021 - நான்காவது சனிக்கிழமை
25 ஜூலை 2021 - ஞாயிறுக்கிழமை
31 ஜூலை 2021- சனிக்கிழமை - கெர் பூஜா
மேற்கண்ட நாட்கள் வங்கிகளுக்கு முழு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வங்கி விடுமுறை
தமிழகத்தில் வார விடுமுறை நாட்களான 6 விடுமுறை நாட்களை தவிர பக்ரீத் அன்று மட்டும் விடுமுறை நாளாக உள்ளது. வாடிக்கையாளர்கள் வங்கி விடுமுறை நாட்களுக்கேற்ப முன்கூட்டியே உங்கள் பரிவர்த்தனை தொடர்பான பணிகளை முடித்து கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் பிடிக்க...
எந்த வகைக் கொரோனாவையும் தடுக்கும் சூப்பர் தடுப்பூசி!
உணவு பதப்படுத்துதல் துறையில் ஊக்குவிப்பு திட்டத்திற்கு ரூ. 11,000 கோடி!!
நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்ட இலவச உணவு தானிய திட்டம் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!
Share your comments