1. மற்றவை

சுய தொழில் தொடங்க நினைப்பவரா நீங்கள்… உங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு

Sarita Shekar
Sarita Shekar

start a self-employment

இலவச தையல் இயந்திரத்தை விரும்பும் பெண் விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் 25-06-2021 அன்று மாலை 5.45 மணிக்குள் பின்வரும் ஆதாரங்களுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாட்டில் சமூக நலத் துறை மூலம் பணிபுரியும் சத்தியவானி முத்து அம்மையாரின் நினைவாக தமிழக அரசு இலவச தையல் இயந்திரம் வழங்குகிறது. இந்த தையல் இயந்திரத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது சென்னை மாவட்டத்தில் தரப்படுகின்றன. ஏழைப் பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இந்த தையல் இயந்திரத்தைப் பெற தகுதியானவர்கள் ஆவார்கள்.

இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயாராணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாவட்டத்தில், சமூக நலத்துறையின் கீழ் 2021 -2022ம் நிதியாண்டிற்கு ’சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம்’ வழங்கும் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரம் வேண்டும் என்கிற பெண் விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சான்றுகளுடன் சென்னை மாவட்ட சமூக நல அலவலகத்தில் 25-06-2021 அன்று மாலை 5.45க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

  • 1.வருமான சான்று ரூ. 72000 / - க்குள் இருக்க வேண்டும்.
  • பிறந்த தேதிக்கான வயது சான்றிதழ் (வயது 20 முதல் 40 வரை இருக்க வேண்டும்)
  • விதவையாக இருப்வர் ஆனால் அதற்கான சான்று (ஆதரவற்ற விதவை சான்று வட்டாச்சியரிடமிருந்து பெற வேண்டும்)
  • சாதி சான்றிதழ்
  • கணவர் விவாகரத்து செய்ததற்கான ஆதாரம் (வட்டாச்சியரிடமிருந்து பெற வேண்டும்)
  • தையல் திறனுக்கான சான்று (6 மாத பயிற்சி முடித்திருக்க வேண்டும்)
  • குடும்ப அட்டை
  • ஆதார் அட்டை

விண்ணப்பிப்பவர்கள் மேற்கண்ட சான்றுகளை நகல்களுடன் கீழ்க்கண்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி,

மாவட்ட சமூக நல அலுவலகம்,

சிங்காரவேலர் மாளிகை,

எட்டாவது மாடி, இராஜாஜி சாலை,

சென்னை-01

என்ற முகவரிக்கு அனுப்புமாறு செய்தி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary: If you are thinking of starting a self-employment then you… have a chance to get to know you

Like this article?

Hey! I am Sarita Shekar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.