1. மற்றவை

சிறிய சேமிப்பில் அதிக லாபம்: அள்ளிக் கொடுக்கும் அருமையான திட்டம்!

R. Balakrishnan
R. Balakrishnan
Small Savings - Big Profit

சிறு சேமிப்புத் திட்டங்களில் தொடர் வைப்புத்தொகை (RD) திட்டம் மிகவும் பிரபலமான சேமிப்பு திட்டமாகும். இது ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தைப் போலவே பாதுகாப்பானது. இத்திட்டத்தில் முதலீடு செய்வது மிகவும் எளிதானது. மாதந்தோறும் ஒரு சிறிய தொகையை டெபாசிட் செய்வதன் மூலம் பெரிய லாபத்தை ஈட்ட முடியும். நீங்கள் எந்த வங்கியிலும் தபால் நிலையத்திலும் RD கணக்கைத் திறக்கலாம்.

தொடர் வைப்புத்தொகை (RD)

தொடர் வைப்புத்தொகை திட்டத்தில் முதலீட்டாளருக்கு நிலையான வட்டி லாபம் கிடைக்கும். இது வங்கி, NBFC மற்றும் தபால் அலுவலகத்தைப் பொறுத்து மாறுபடலாம். RD கணக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு திறக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் முதலீட்டாளர் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். முதிர்வுக் காலம் முடிந்ததும், டெபாசிட் செய்யப்பட்ட தொகை வட்டியுடன் சேர்த்து திருப்பி அளிக்கப்படும். ஆறு மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை உங்கள் வசதிக்கேற்ப ஆர்டி திட்டத்தில் பணம் போடலாம். இதில் கிடைக்கும் வட்டி கிட்டத்தட்ட வங்கியில் உள்ள ஃபிக்சட் டெபாசிட்டுக்கு சமமானது. கடன் வாங்கும் வசதியும் இத்திட்டத்தில் உள்ளது. உங்கள் டெபாசிட் தொகையில் 80 முதல் 90 சதவீதம் வரை கிடைக்கும்.

வட்டி (Interest)

பல்வேறு வங்கிகள் முதிர்வு காலத்திற்கு முன்பே RD இல் இருந்து பணத்தை எடுக்க அனுமதிக்கின்றன. ஆனால் இதற்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இத்திட்டத்தின் வட்டி விகிதம் பற்றி முன்னரே நீங்கள் விசாரித்துக் கொள்ள வேண்டும். வட்டி விகிதம் 2.90 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரை இருக்கலாம்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால் மாதத்துக்கு 10,000 ரூபாய் முதலீட்டில் ரூ.7 லட்சம் வரை சம்பாதிக்கலாம். அந்த வங்கியில் 5.6 சதவீத வட்டி நடைமுறையில் உள்ளது. இதேபோல, வங்கி மற்றும் வட்டியைப் பொறுத்து லாபம் கிடைக்கும்.

மேலும் படிக்க

SBI வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி: புதிய திட்டம் அறிமுகம்!

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் வர இது தான் ஒரே வழி!

English Summary: Big Profits with Small Savings: Great Plan to Give Away! Published on: 08 September 2022, 09:32 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.