இந்தியர்கள் அனைவருக்குமே ஆதார் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஆதார் இல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளையும் பெறமுடியாது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல், வங்கிக் கணக்கு மற்றும் பணம் சார்ந்த விஷயங்களிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. வங்கியில் கடன் வாங்குவதற்குக் கூட ஆதார் தேவை. இந்த ஆதார் கார்டை மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்.
ஆதார் கார்டு (Aadhar Card)
ஒருவருடைய ஆதார் விவரங்களை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. ஆதாரை வைத்து பண மோசடி செய்யும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. எனவே ஆதார் விவரங்களையோ அல்லது ஆதார் கார்டையோ தேவையில்லாமல் வேறு யாரிடமும் பகிர்வது பாதுகாப்பானதாக இருக்காதென்று தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆதார் அமைப்பு (UIDAI) பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வும் வழங்கி வருகிறது. இந்நிலையில் ஆதார் பாதுகாப்பு தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை ஆதார் அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதில், வாடிக்கையாளர்களின் தனிநபர் விவரங்களை அப்டேட் செய்யும்படி சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தாங்கள் ஒருபோதும் போன் செய்து வலியுறுத்துவதில்லை எனவும், ஆதார் தொடர்பான அப்டேட்களை சம்பந்தப்பட்ட நபர்கள் ஆதார் சேவை மையத்துக்கு நேரில் வந்து தாங்களே செய்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
ஏனெனில், நிறையப் பேருக்கு வங்கிகள் தரப்பிலிருந்தும் ஆதார் அமைப்பு தரப்பிலிருந்தும் போன் செய்வதாகக் கூறி தனிநபர் விவரங்களைத் திருடி மோசடியில் ஈடுபடுகின்றனர். இதில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று ஆதார் அமைப்பு மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை செய்துள்ளது.
மேலும் படிக்க
ஆதார் கார்டு இருந்தா இது ஈசி தான்: ஆதார் அமைப்பின் முக்கிய அறிவிப்பு!
அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: தேதியை அறிவித்த மாநில அரசு!
Share your comments