மத்திய அரசின் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. மாற்றப்பட்ட விதிகளின் இனி வீடு சொந்த வீடு இல்லை. இதற்கு மாற்றாக, வீடு பயனாளிகளுக்குத் குத்தகைக்கு விடப்பட்டுக் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு நீட்டிக்கப்பட உள்ளது.
இந்தியாவில் உள்ள வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்காக மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.அதன் தொடர்ச்சியாக, மிக முக்கியமான திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டதுதான் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் வீடற்ற ஏழை எளிய மக்கள் மானியத்துடன் கூடிய கடனுதவியைப் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால் ரூ.2.67 லட்சம் வரையில் மானிய உதவி வழங்கப்படுகிறது.
2015ஆம் ஆண்டு இந்த மகத்தானத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 2022ஆம் ஆண்டுக்குள் 2 கோடி வீடுகள் கட்டித்தர இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.அதன்படி, அரசு தரப்பிலிருந்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மத்திய அரசின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
புகார்கள்
சிலர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வீடுகளை வாடகைக்கு விட்டு சம்பாதிப்பதாகக் குற்றச்சாட்டுகள் வந்த நிலையில், மத்திய அரசு புதிய விதிமுறையைக் கொண்டுவந்துள்ளது.
புதியக் கெடுபிடி
அதன்படி, இத்திட்டத்தின் பயனாளிகள் அவர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டில் தொடர்ந்து 5 ஆண்டுகள் வசிக்க வேண்டும். குத்தகை அடிப்படையிலேயே அவர்களுக்கு இந்த வீடு வழங்கப்படும். ஐந்து ஆண்டுகள் முடிந்ததும் குத்தகை ஒப்பந்தம் நீட்டிக்கப்படும்.
வீட்டின் உரிமையாளர் ஒருவேளை திடீரென இறந்துவிட்டால் அவரது குடும்ப உறுப்பினரின் பெயரில் அந்த வீடு மாற்றப்படும். வேறு யாருக்கும் அந்த வீட்டை வழங்க அரசு ஒப்புதல் அளிக்காது. அவ்வாறு மற்றவர்களுக்கு கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் கிடையாது.
மேலும் படிக்க...
சேமிப்புக் கணக்கு வட்டி உயர்வு - வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி!
Share your comments