இந்தியாவில் அரசு ஊழியர்கள் பெறும் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதி அவர்களின் PF கணக்கின் கீழ் சேமிக்கப்படுகிறது. அதாவது EPFO நிறுவனத்தின் கீழ் PF கணக்கு தொடங்கப்பட வேண்டும். இந்நிறுவனம் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களை வழங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக EPFO தொடர்பாக பல்வேறு வகையான முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் பெறப்பட்டுள்ளது. அதனால் இதனை தடுக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தனிப்பட்ட விவரங்கள் (Personal Details)
EPFO வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது, EPFO வாடிக்கையாளர்களிடம் சமூக வலைதளம் அல்லது தொலைபேசி மூலமாக தெரியாத நபர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள். அதன் பின்பு தங்களின் இபிஎஃப் எண், வங்கி எண், ஓடிபி உள்ளிட்ட விவரங்களை கேட்ப்பார்கள். ஆனால் நீங்கள் யாரிடமும் உங்களின் தனிப்பட்ட விவரங்களை பகிர கூடாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து தெரியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகள் அல்லது செய்திகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உங்களுக்கு வழங்கப்படும் சில EPFO சேவைகளை DigiLocker மூலம் அணுக முடியும் என்பதையும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து வாட்ஸ்அப், சமூக ஊடகங்கள் உள்ளிட்டவற்றின் மூலமாக தங்களுக்கு பணத்தை அனுப்ப வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவீர்கள்.
ஆனால் எந்தவொரு சேவைகளுக்காகவும் EPFO நிறுவனம், தங்களின் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்படி EPFO நிறுவனம் சார்பாக ஒரு நாளும் கூறப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
உங்களிடம் தங்கப் பத்திரம் இருக்கா? வங்கியில் ஈஸியா கடன் வாங்கலாம்!
Share your comments