இனி அனைத்து பொது காப்பீட்டு நிறுவனங்களும், மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களும் மன நோய்களுக்கும், எச்ஐவி/எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உரிய காப்பீட்டை கட்டாயமாக வழங்க வேண்டும். இதுகுறித்த உத்தரவை இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையமான IRDAI வெளியிட்டுள்ளது.
காப்பீடு (Insurance)
சில மாதங்களுக்கு முன்பே அனைத்து மருத்துவ இன்சூரன்ஸ் நிறுவனங்களும் தங்களது இன்சூரன்ஸ் கவரேஜில் மனநலம் சார்ந்த நோய்களுக்கு காப்பீடு வழங்க வேண்டும் என IRDAI உத்தரவிட்டிருந்தது. ஆனால், வெகு சில நிறுவனங்களே மன நோய்களுக்கு காப்பீடு வழங்க தொடங்கியுள்ளன. இந்த சூழலில், பதிவுச் சான்றிதழ் பெற்ற அனைத்து பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களும், தனி மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களும் கட்டாயமாக மனநோய்களுக்கும், எச்ஐவி/எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் இன்சூரன்ஸ் கவரேஜ் வழங்க வேண்டும் என IRDAI உத்தரவிட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், மேற்கூறியபடி மன நோய்களுக்கும், எச்ஐவி/எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் இன்சூரன்ஸ் கவரேஜ் சார்ந்த திட்டங்களை அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களும் உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, மருத்துவ காப்பீடு பாலிசிகளில் மன நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், எச்ஐவி/எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் இன்சூரன்ஸ் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும். இன்சூரன்ஸ் நிறுவனங்கள் விரும்பினால் கூடுதல் வசதிகளை வழங்கலாமே தவிர, மேற்கூறிய சேவைகளை குறைக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், மேற்கூறிய இன்சூரன்ஸ் வசதிகள் நிச்சயமாக வழங்கப்படும் என அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களும் கொள்கை உருவாக்கி அதற்கு அந்தந்த நிறுவனங்களின் நிர்வாகக் குழு (Board) ஒப்புதல் அளித்து வெளியிட வேண்டும் என IRDAI உத்தரவிட்டுள்ளது. இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கான விலையை IRDAI (மருத்துவக் காப்பீடு) விதிமுறைகள் 2016 அடிப்படையில் இன்சூரன்ஸ் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ளலாம் எனவும் IRDAI வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
100 நாள் வேலைத் திட்டத்தில் இணைய யாருக்கெல்லாம் உரிமை உண்டு? அரசின் புதிய அறிவிப்பு!
PM Kisan: 2000 ரூபாய் வந்துடுச்சா? இல்லையென்றால் உடனே இதைப் பண்ணுங்க!
Share your comments