மத்திய அரசு ஊழியர்களுக்கு குடும்பப் பென்சன் விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதாவது மத்திய அரசு ஊழியர்கள் பணிக்காலத்தில் காணாமல் போகும் பட்சத்தில், அவரது குடும்பத்தினரின் நிதிச்சுமையை எதிர்கொள்ள ஏதுவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவு ஊழியர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதால், அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
யாருக்கு பலன்?
தீவிரவாதம், மாவோயிஸ்ட் ஊடுருவலால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மூ காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு குடும்ப பென்சன் விதிகள் மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, இப்பகுதிகளில் காணாமல் போன மத்திய அரசு ஊழியர்களுக்கு பென்சன் விதிகள் மாற்றபட்டுள்ளது.
புதிய விதிகள்
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தீவிரவாதம், மாவோயிஸ்ட் ஊடுருவலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய அரசு ஊழியர்கள் பணிக்காலத்தின்போது காணாமல் போனால் அவர்களின் குடும்பத்துக்கு பென்சன் வழங்கப்பட வேண்டும்.
மற்றப் பலன்கள்
புதிய பென்சன் திட்டத்தின் கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர் பணிக்காலத்தின்போது தொலைந்துவிட்டால் சம்பள நிலுவைத் தொகை, பணிக்கொடை, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட பலன்கள் அவரது குடும்பத்துக்கு செலுத்தப்பட வேண்டும்.
சம்பளம் பிடிப்பு
காணாமல் போன மத்திய அரசு ஊழியர் மீண்டும் வந்துவிட்டால், இடைப்பட்ட காலத்தில் குடும்பத்துக்கு செலுத்தப்பட்டு வந்த பென்சன் தொகை அவரது சம்பளத்தில் இருந்து பிடித்துக்கொள்ளப்படும்.
பென்சன் இல்லை
இதற்கு முன்பு, மத்திய அரசு ஊழியர் பணிக்காலத்தில் தொலைந்துவிட்டால் அவரது குடும்பத்துக்கு பென்சன் வழங்கப்படாது. மாறாக, அவர் தொலைந்து ஏழு ஆண்டுகள் கழிந்து அல்லது அவர் இறந்துவிட்டார் என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு குடும்பத்துக்கு பென்சன் வழங்கப்படும். இந்தப் புதிய விதிகள் மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க...
ரூ.1லட்சம் பென்சன் தரும் மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!
Indian Air Forceஸில் வேலை - பிளஸ் 2 படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!
Share your comments