கொரோனா நோய் தொற்றுக் காலத்தில், மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட்டுகளில் வழங்கப்பட்ட சலுகைகள் ரத்து செய்த மத்திய அரசு, தற்போது அதனை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளது.
கட்டணச் சலுகை
ரயில்களில் பயணம் செய்வோரில், மூத்த குடிமக்கள் அதாவது 60 வயதிற்கு அதிகமானோர், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு டிக்கெட் கட்டணத்தில், சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவிய காலத்தில், இந்த சலுகைகள் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
மீண்டும்
இந்நிலையில், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உட்பட பிற வகை பயணிகளுக்கு ரயில் டிக்கெட் கட்டணத்தில் வழங்கப்பட்ட சலுகையை மீண்டும் தொடங்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விமர்சனங்களும், கோரிக்கைகளுக்கு எழுந்த பிறகு, மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை மீண்டும் வழங்குவது குறித்து ரயில்வே பரிசீலித்து வருகிறது.
யாருக்கு
ஆனால் அது பொது மற்றும் ஸ்லீப்பர் பிரிவினருக்கு மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது.மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் கட்டணத்தில் சலுகை தொடர்பாக, வயது அளவுகோல் போன்ற விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் அரசாங்கம் மாற்றி அமைக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாற்றம்
58 வயது பெண்களுக்கும் 60 வயது ஆண்களுக்கும் இருந்த சலுகைக் கட்டண வசதியை, 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு வழங்கலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
சலுகை
ரயில் கட்டணத்தில் முன்னதாக வழங்கப்பட்ட சலுகை, 2020 மார்ச் மாதத்திற்கு முன், மூத்த குடிமக்களைப் பொறுத்தவரையில், அனைத்து வகுப்புகளிலும் பயணிக்க பெண்களுக்கு 50 சதவீதமும், ஆண்களுக்கு 40 சதவீதமும் தள்ளுபடியை ரயில்வே வழங்கியது. ரயில்வேயில் இருந்து இந்த சலுகை பெறுவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு, வயதான பெண்களுக்கு 58 ஆகவும், ஆண்களுக்கு 60 ஆகவும் இருந்தது. ஆனால், கொரோனா காலத்திற்குப் பிறகு, அவர்களுக்கு இருந்த அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பரிசீலனை
மூத்த குடிமக்களுக்கான சலுகைக்கான வயது வரம்புகளை மாற்றி 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே சலுகை வழங்க ரயில்வே வாரியம் ஆலோசித்து வருகிறது.
மேலும் படிக்க...
மாத சம்பளதாரர்களுக்கு விரைவில் ரூ.81,000 - மத்திய அரசு அறிவிப்பு!
Share your comments