சென்னியில் விடிய விடிய கொட்டிய கனமழையால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இன்னும் 3 நாட்களுக்கு மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் பலவேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலான மழை பெய்து வருகிறது மற்றும் இந்த மழை இன்னும் 3 நாட்களுக்கு தொடர வாய்ப்புள்ளது.
தெற்கு மற்றும் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவர்ளுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் வங்கக் கடல் பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காற்றானது நிலை கொண்டுள்ளதால் நேற்று இரவு முதல் வட தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக அடுத்த சில தினங்களுக்கு மழை தொடரும் என்றும் சேலம், சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருப்போரூர், நாகப்பட்டினம், கடலூர், திவண்ணாமலை, விழுப்புரம், காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தேவகோட்டை, இளையான்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் சாலைகளிலும், கால்வாய்களிலும் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, பசும்பொன் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் வஷிஷ்ட நதி, சின்னாற்று ஓடையிலும் வெள்ளப்பெருக்கெடுத்து ஓயாது. மேலும் ஆங்காங்கே சிறிய சிறிய அருவிகள் தோன்றியுள்ளன.
திருவள்ளூர் மற்றும் அதன் சுடுறவட்டார பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் மாவட்டங்களின் பெரும்பாலான ஏரிகள் நிரம்பியுள்ளன. மேலும் உதப்பை வழியே செல்லும் கொசிஸ்தலை ஆற்றிலும் வெள்ளம் சீறிப்பாய்கிறது.
திருத்தணி சுற்றுவட்டார பாகுதிகளில் பெய்து வரு கனமழையால் கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் இரவு 15 செ.மீ பெய்த பரவலான மழையால் நீர் நிலைகள் வேகமாக உயர்ந்து வருகின்றன.
திருப்பதியில் விடிய விடிய பெய்த மழையால் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். தொடர் மழையால் திருப்பதியில் உள்ள நீர் நிலைகள் வேகமாக உயர்ந்து வருகிறது.
K.Sakthipriya
Krishi Jagran
Share your comments