பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் சென்னை பேருந்தின் ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டபோது, ஒரு பெண் துணிச்சலாக டிரைவர் பணியைச் செய்து, பேருந்து 10 கிலோ மீட்டர் ஓட்டிச் சென்றது மற்றவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.
இரக்கம்
பிறருக்குத் துன்பம் என வரும்போது, இரக்க குணம் கொண்ட உள்ளம் எப்போதுமேத் துடிக்கும். அதிலும், உயிருக்கு ஆபத்து என வரும்போது, நம்மையும் அறியாமல், நம் கை அவர்களுக்கு உதவ ஓடிவரும். அப்படியொரு சம்பவம்தான் மகாராஷ்டிராவில் நிகழ்ந்திருக்கிறது.
வாராது வந்த வலிப்பு
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் சென்ற பேருந்தின் டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஒரு பெண் பயணி சமயோசிதமாக செயல்பட்டு பேருந்தில் இருந்தவர்களின் உயிரைக் காப்பாற்றி உள்ளார்.
புனே அருகே ஷிரூரில் உள்ள வேளாண் சுற்றுலா மையத்திற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மினி பேருந்தில் சுற்றுலா சென்றுவிட்டு ஊர் திரும்பினர்.
அப்போது ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. கை கால்கள் இழுத்த நிலையில், அவர் சாலையின் நடுவே பேருந்தை நிறுத்தினார். இதனால் பேருந்தில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் பயந்து நடுங்கி அழத் தொடங்கினர்.
சிகிச்சை
அப்போது அந்த பேருந்தில் பயணம் செய்த யோகிதா சாதவ் என்ற 42 வயது பெண், பேருந்தை தான் ஓட்டுவதாக கூறி அனைவரையும் அமைதிப்படுத்தி உள்ளார். ஓட்டுநரை ஓரமாக அமரவைத்துவிட்டு, பேருந்தை அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்றுள்ளார். உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, மற்ற பயணிகளை அவர்களின் ஊர்களில் இறக்கி விட்டுள்ளார்.
தனக்கு கார் ஓட்டத் தெரிந்ததால், பேருந்தை ஓட்டுவதற்கு முடிவு செய்ததாகவும், டிரைவருக்கு சிகிச்சை அளிப்பதுதான் முதல் முக்கியமான பணி என்பதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பேருந்தை ஓட்டிச் சென்று, அவரை அங்கே சேர்த்ததாகவும் யோகிதா கூறுகிறார்.
பல மைல் தூரம்
நெருக்கடியான நேரத்தில் பதற்றமடையாமல் துணிச்சலாக சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் பேருந்தை ஓட்டிய யோகிதாவை அனைத்து தரப்பினரும் பாராட்டினர். நம் கண் முன்னே, மற்றவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலைவரும் உருவாகும்போது, அந்த சூழ்நிலையே எந்தச் செயலையும் செய்யும் துணிவைத் தரும் என்பதற்கு இந்தச் சம்பவம் சாட்சி.
மேலும் படிக்க...
மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த மஞ்சப்பை பரோட்டா: மதுரையில் அறிமுகம்!
தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை: முதல்வர் தொடக்கி வைக்கிறார்!
Share your comments