2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹானில் முதலில் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கிய கொரோனா தொற்று தனது தாக்கத்தை பரவிக்கொண்டே கொண்டே செல்கிறது.
தொடக்கத்தில் சீனாவின் ஓரிரு இடங்களில் மட்டுமே கண்டறியப்பட்ட கொரோனா தொற்று, கொஞ்சம் கொஞ்சமாக உலகையே ஆட்டிப்படைத்து, ஊரடங்கு என்ற நிலைக்கு கொண்டு வந்து அனைத்து நாடுகளையும் முடக்கியது.
கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டறியப்பட்டதும் ஏற்பட்ட ஆசுவாசம், அதன் இரண்டாவது அலை ஏற்படுத்திய அச்சத்தால் மட்டுப்பட்டது. தற்போது இரண்டாவது அலையின் தாக்கம் குறையும் சூழ்நிலையில், இன்னும் சில வாரங்களில் மூன்றாவது அலை உலகை தாக்கும் என்ற தகவல் அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஆற்று நீரில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது கவலைகளை அதிகரித்துள்ளது.
சபர்மதி ஆற்றிலிருந்து எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளில் கொரோனா வைரஸ் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர், இது மிகவும் ஆபத்தான அறிகுறி என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
சபர்மதி ஆற்றிலிருந்து 694 க்கும் மேற்பட்ட மாதிரிகள் சேகரிக்கப்பட்டன, 549 மாதிரிகள் சந்தோலா ஏரியிலிருந்து எடுக்கப்பட்டது, மற்றும் 402 மாதிரிகள் காங்க்ரியா ஏரியிலிருந்து எடுக்கப்பட்டது.
தண்ணீரில் கொரோனா வைரஸ் இருக்கிறதா இல்லையா என்ற ஆராய்ச்சியை, ஐ.ஐ.டி காந்திநகர் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் பள்ளி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளில் நாவல் கொரோனா வைரஸின் தடயங்களை கண்டுபிடித்துள்ளனர்.
ஏரிகள் மற்றும் ஆறுகளில் SARS-CoV-2 இருப்பது அச்சுறுத்தல் நிலைக்கு வழிவகுக்கும் என்று காந்திநகரின் ஐ.ஐ.டி.யில் பூமி அறிவியல் துறை பேராசிரியர் மனிஷ்குமார் விளக்கமளித்தார்.
இந்த குழு 2019 செப்டம்பர் 3 முதல் டிசம்பர் 29 வரை வாரத்தில் ஒரு முறை நீர் மாதிரிகளை சேகரித்தது. சபர்மதி ஆற்றிலிருந்து 694 க்கும் மேற்பட்ட மாதிரிகள் சேகரிக்கப்பட்டன, 549 சந்தோலா ஏரியிலிருந்து எடுக்கப்பட்டது, 402 காங்க்ரியா ஏரியிலிருந்து எடுக்கப்பட்டது.
வைரஸ் இயற்கை நீரில் அதிக காலம் வாழக்கூடும் என்று அவர்களின் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில், நதிகளில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சடலங்கள் கண்டறியப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு தண்ணீரில் கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்தது.
நீரில் உள்ள COVID-19 தடயங்களை அடையாளம் காண பெங்களூரில் நகர கழிவுநீர் கண்காணிப்பு முறையை அறிமுகப்படுத்திய நாட்டின் முதல் மாநிலம் கர்நாடகா என்பது குறிப்பிடத்தக்கது.
வேறு பல இடங்களில் உள்ள நீர்நிலைகளில் கொரோனா வைரஸ் காணப்படுகிறதா என்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் இதேபோன்ற ஆராய்ச்சிகளை நாடு முழுவதும் நடத்தப்பட வேண்டும். இந்த நிலையில் கொரோனாவின் மூன்றாவது அலை தண்ணீரால் பரவலாம் என்ற எண்ணம் உருவாகிறது. அதுமட்டும் உண்மையென்றால், மூன்றாம் அலையின் வீரியமும், அது வாங்கும் பலி எண்ணிக்கையும் அதிகமாக இருக்கக்கூடும்.
மேலும் படிக்க:
டெல்டா பிளஸ் வகை கொரோனாவின் அச்சுறுத்தல்.மூன்று மாநிலங்களுக்கு எச்சரிக்கை!
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட தன்னார்வலர் மரணம் - பாரத் பயோடெக் விளக்கம்!!
Share your comments