தக தகவென மின்னும் தங்கம், பெண்களின் விருப்பமான உலோகம். இதை அணிந்துகொள்ளும்போது, சமூகத்தில் தனி கவுரவம் கிடைக்கும் என்பதன் காரணமாகவே, தங்கம் எப்போதுமேப் பெண்களின் தேர்வாகவே இருக்கிறது. அதிலும் தென்னிந்தியாவில் நகைகளுக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு. திருமணம் மட்டுமல்லாது, பிற சடங்குகளிலும், தங்கம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாத செயலாக உள்ளது எனலாம்.
மிகவும் விலை உயர்ந்த, இத்தனை முக்கியத்துவம் வாய்ந்தத் தங்கத்தை வாங்கும் போது, நம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தங்க நகைகள் வாங்கும் போது, அதில் போலி மற்றும் கலப்படம் இருப்பதாக அடிக்கடி புகார்கள் வருகின்றன. சுத்தமான தங்கம் என்ற பெயரில் விற்கப்படும் சில நகைகளில், வெள்ளி, செம்பு, துத்தநாகம் கலக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. அவ்வாறு நீங்கள் வாங்கும் தங்கம் உண்மையானதா அல்லது போலியா என்பதை பொற்கொல்லர்கள் சில வழிகளில் கண்டறிய முடியும்.
கலப்படத்தைக் கண்டறிய
தண்ணீர்
-
ஒரு வாளியில் தண்ணீரை ஊற்றி அதில் உங்கள் நகைகளை போடவும்.
-
நகை மூழ்கினால், தங்கம் உண்மையானது என்றும், சிறிது நேரம் மிதந்தால், தங்கம் போலியானது என்றும் புரிந்து கொள்ளுங்கள்.
-
தங்கம் எவ்வளவு லேசானதாக இருந்தாலும், அது எப்போதும் தண்ணீரில் மூழ்கிவிடும்.
வினிகர்
-
சமையலுக்குப் பயன்படுத்தும் வினிகரைக் கொண்டும் தங்கத்தை சோதிக்க முடியும்.
தங்க நகைகளில் சில துளிகள் வினிகரை தடவவும். அதன் நிறத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அது போலியானது.
-
நிறத்தில் மாற்றம் இல்லை என்றால், அது உண்மை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
நைட்ரிக் அமிலம்
-
தங்க நகைகளைத் துடைத்து அதன் மீது ஒரு சில துளிகள் நைட்ரிக் அமிலத்தைப் ஊறினால் அதன் நிறம் பச்சையாக மாறினால் தங்கம் போலியானது.
-
உண்மையான தங்கம் நிறம் மாறாது.
-
இருப்பினும், இந்த சோதனையில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அந்த அமிலம் நம் கைகளில் விழுந்தால், ஓட்டி ஏற்படும்.
வாசனை
-
தங்கத்தின் மீது வியர்வை பட்ட நிலையில், அதன் மீது வாசனை வீசுகிறது என்றால், அது கலப்படம் உள்ள தங்கம் என்று அர்த்தம்.
-
உண்மையான தங்கத்திற்கு வாசனை கிடையாது.
மேலும் படிக்க...
Share your comments