சொந்தமாக ஒரு தொழில் செய்து லாபம் சம்பாதிக்க நிறையப் பேர் முயற்சிப்பார்கள். நீங்களும் அவ்வாறு சொந்தமாக ஒரு தொழில் செய்து பணம் சம்பாதிக்க விரும்பினால் உங்களுக்கான செய்திதான் இது.
தொழில் தொடங்க (Start a business)
நீங்கள் அதிகம் பணம் சம்பாதிக்க ஒரு தொழிலைத் தேடுபவராக இருந்தால் இன்று உங்களுக்கு ஒரு திட்டத்தைப் பற்றி கூறுகிறோம். இதன் மூலம் நீங்கள் பல லட்சங்கள் சம்பாதிக்கலாம். 50,000 ரூபாயில் கூட இந்தத் தொழிலைத் தொடங்கலாம் என்பதுதான் சிறப்பு. இதனுடன், நகரங்களில் இந்த தொழிலின் தேவை மிகவும் அதிகமாக உள்ளது. வீட்டின் அமர்ந்துகொண்டே இந்தத் தொழிலை நீங்கள் செய்து சம்பாதிக்க முடியும்.
சந்தையில் அதிக டிமாண்ட் உள்ள ஹோர்டிங்ஸ் பிசினஸைப் பற்றி நீங்கள் இப்போது தெரிந்துகொள்ளுங்கள். பல பெரிய நிறுவனங்கள் தங்கள் விளம்பரத்திற்காக ஹோர்டிங் உதவியைப் பெறுகின்றன. தற்போது இந்த தொழிலின் மூலம் 10 முதல் 12 லட்சம் ரூபாய் வரை மக்கள் எளிதாக சம்பாதிக்கின்றனர்.
இந்தத் தொழிலை நீங்கள் செய்வதற்கு கணினி மற்றும் கிராபிக்ஸ் பற்றிய அறிவு இருக்க வேண்டும். இன்டர்நெட், லேப்டாப், பிரிண்டர் போன்ற சில அத்தியாவசிய பொருட்கள் உங்களிடம் இருக்க வேண்டும். இதனுடன், நீங்கள் உங்கள் சொந்த வலைத்தளத்தையும் உருவாக்க வேண்டும். இது விளம்பரப்படுத்துவதையும் ஆர்டர்களை எடுப்பதையும் மிகவும் எளிதாக்குகிறது.
வருமானம் (Income)
வெறும் 50,000 ரூபாயில் இந்தத் தொழிலைத் நீங்கள் தொடங்கலாம். ஒரு மாதத்தில் நீங்கள் எத்தனை ஹோர்டிங்குகளை நிறுவுகிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்கள் வருமானம் அமையும். இடத்திற்கு ஏற்ப ஒரு லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் அதிகமாக வசூலிக்கலாம். அதன் விலை நகரம் மற்றும் இருப்பிடத்தைப் பொறுத்தது.
நீங்கள் ஒரு ஆடம்பரமான பகுதியில் அல்லது ஹை புரோஃபைல் இடத்தில் விளம்பரம் செய்தால், நீங்கள் ஒரு மாதத்தில் 10 லட்சம் வரை எளிதாக சம்பாதிக்கலாம். இதன்படி உங்கள் ஒரு வருட விற்றுமுதல் கோடிகளை எட்டும். இந்த பிசினஸ் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் மூலம் நிறையப் பேர் லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்.
மேலும் படிக்க
சாக்லெட் பிசினஸ் தொடங்க ரூ.10,000 போதும்: பல லட்சம் லாபம்!
வீட்டுக் கடன் வட்டியை உயர்த்தியது ICICI வங்கி: வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி!
Share your comments