EPF விதிகளின்படி, நீங்கள் ஒரு வேலையை விட்டுவிட்டு வேறு ஒரு நிறுவனத்தில் சேரவில்லை என்றாலும், உங்கள் கணக்கில் இருக்கும் தொகை மூன்று ஆண்டுகளுக்கு வட்டியைப் பெறும். எனவே வேலையை விட்டு வெளியேறிய உடனேயே ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கிலிருந்து திரும்பப் பெறுவது என்பது ஒரு புத்திசாலித்தனமான செயலாக இருக்காது. நீங்கள் ஒரு புதிய வேலையைப் பெறத் தவறினால், 36 மாதங்கள் வரை மட்டும் தான் அதாவது 3 வருடங்களுக்கு மட்டும்தான் வட்டி செலுத்தப்படும் அதன் பிறகு வட்டி செலுத்தப்படாது. மேலும் கணக்கு செயலிழந்துவிடும் என்பதால், கடைசி வேலையை விட்டு வெளியேறிய 36-மாத காலம் முடிவதற்குள் நீங்கள் PF பணத்தை திரும்பப் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
EPFO கணக்கு (EPFO Account)
EPFO கணக்கு வைத்துள்ளவர்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து வெளியேறிய பின், புதிய வேலையைப் பெறும் வரை காத்திருந்து, புதிய வேலை கிடைத்தவுடன் அந்த நிறுவனத்தின் கணக்கிற்கு PF பணத்தை மாற்றிக்கொள்ளலாம். ஓய்வூதிய உறுப்பினரைத் தக்கவைத்துக்கொள்ள படிவம் 10C மூலம் நீங்கள் திரும்பப் பெறும் நன்மை அல்லது திட்டச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்.
நீங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தகுதியான சேவையைப் பெற்றுள்ளதால், இந்த நடைமுறையில் பணத்தை திரும்பப் பெறும் பலன் அனுமதிக்கப்படாது என்று EPFO கூறுகிறது. திட்டச் சான்றிதழ் (sheme certificate) மட்டுமே வழங்கப்படும். நீங்கள் வெளியேறும் தேதியில் 10 ஆண்டுகள் தகுதியான சேவையை நிறைவு செய்யவில்லை என்றால், ஓய்வூதிய நிதியிலிருந்து PF திரும்பப் பெறுதல், மற்றும் திட்டச் சான்றிதழ் (sheme certificate) போன்றவற்றிற்கு விண்ணப்பிக்கலாம். 10 ஆண்டுகளுக்கும் குறைவான தகுதியுள்ள சேவையில் இருந்தாலும், 58 வயதுக்கு முன், உறுப்பினரின் மரணம் ஏற்பட்டால் குடும்ப ஓய்வூதியப் பலன்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.
50 முதல் 58 வயதுக்குள் உள்ளவர்கள்
50 ஆண்டுகளுக்குப் பிறகும், 58 வயதுக்கு முன்பும் ஓய்வூதியம் பெற வசதி உள்ளது. இதில் நீங்கள் குறைக்கப்பட்ட ஓய்வூதியத்தைப் பெறுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள், இதற்காக நீங்கள் படிவம் 10D ஐ நிரப்ப வேண்டும். சேவை 10 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால், அவர்கள் 58 வயதில் ஓய்வூதியத் தொகையை திரும்பப் பெறுவதற்கான வசதி கிடைக்கும். ஓய்வூதியம் 58 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகக் கணக்கிடப்படும், மேலும் 58 வயது முதல் ஒவ்வொரு ஆண்டும் பின்தங்கியவர்களுக்கு 4% ஓய்வூதிய தொகை குறைக்கப்படும்.
வயது 58க்கு மேல்
10 ஆண்டுகள் தகுதியான சேவை முடிந்துவிட்டால், PF இன் ஃபைனல் செட்டில்மெண்ட் மற்றும் ஓய்வூதியத்திற்கு படிவம் 10D மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க
அடல் பென்சன் யோஜனா திட்டம்: வெளிவந்தது புதிய அப்டேட்ஸ்!
1,000 ரூபாய் பொங்கல் பரிசு வாங்காதவர்கள் இத்தனை நபர்களா? கூட்டுறவுத்துறை அறிவிப்பு!
Share your comments