உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள ரஷ்யா - உக்ரைன் பிரச்சினை சர்வதேச அளவில் பொருளாதார ரீதியாகவும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கச்சா எண்ணெய் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு ரஷ்யா, உக்ரைன் நாடுகளைச் சார்ந்திருக்கின்றன. இதனால். இந்திய வங்கிகளுக்கு என்ன பாதிப்பை, இந்த பதிவில் பார்க்கலாம்.
உக்ரைனில் போர்களம் பூண்டுள்ளது, மக்கள் பீதியில் உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கூட உக்ரைன் போரில் சீக்கித் தவித்தனர். இதில் பாதிக்கும் மேல் தாயகம் திரும்புயுள்ளனர். இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினையால் பொருளாதாரத் தடை விதிக்கப்படுவது மற்ற நாடுகளையும் பாதித்து வருகிறது.
இந்நிலையில் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ரஷ்ய நிறுவனங்களின் வங்கிப் பரிவர்த்தனை சேவைகளை நிறுத்துவதாக இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்திருப்பது குறிப்பிடதக்கது. இதுகுறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தடை விதிக்கப்பட்ட நிறுவனங்கள் அல்லது துறைகள் உடனான வங்கிப் பரிவர்த்தனைகள் விளைவாக வங்கி மீதும் தடை விதிக்கப்படும் அச்சம் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது
அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு போன்றவற்றால் தடை விதிக்கப்படும் நிறுவனங்கள், வங்கிகள், துறைமுகங்கள் போன்ற அனைத்து மையங்களுக்கான பரிவர்த்தனைகளும் நிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தரப்பில் மாஸ்கோ நகரத்தில் கமர்சியல் இந்தோ பேங்க் லிமிடெட் என்ற பெயரில் வங்கிச் சேவை வழங்கப்பட்டு வருவதால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் கனரா வங்கியும் 40 சதவீதப் பங்குகளைக் கொண்டுள்ளது. இது தொடர்பான பரிவர்த்தனைக்கு தற்போது தடை விதிக்கப்பட்டிருப்பது கவனிக்க வேண்டிய விஷயமாகும்.
மேலும் படிக்க:
Share your comments