1. மற்றவை

எடுபிடியான எடப்பாடி- மக்கள் அதிர்ச்சி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Edapady name changed to edupidi!
Credit : The New Indian Express

சேலம் மாவட்டம் எடப்பாடியில் ஆதார் அட்டையில் பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்யும்போது ஊர் பெயர் எடுபிடி என பிரிண்டாகி வந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மத்திய அரசு பிடிவாதம்

இந்தியாவில் அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரசின் நலத்திட்ட உதவியைப் பெற ஆதார் கட்டாயம். இவ்வாறு கட்டாயப்படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய போதிலும், அதனை ஏற்க மறுத்து, மத்திய அரசு தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது.

ஆதாரில் திருத்தம்

இதனால் இந்தியா முழுவதும் ஏறக்குறைய அனைத்து மக்களிடமும் ஆதார் அட்டை ஆவணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஆதார் அட்டை இல்லாதவர்கள், அட்டையில் திருத்தம் செய்பவர்கள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அரசின் இ-சேவை மையத்தை அனுகி வருகின்றனர்.

எடுபிடி என மாறுகிறது

இப்படி வருபவர்களுக்கு அவர்களின் ஆதார் அட்டை எண்ணை வைத்து முகவரி உட்பட அனைத்து திருத்தங்களும் செய்யப்பட்டு வருகிறது. ஆன்லைனில் பதிவு செய்த ஒரு வாரத்திற்கு இந்த மாற்றம் செயல்படுத்தப்படும். அந்த வகையில் சேலம் மாவட்டம் எடப்பாடியில் ஆதார் அட்டையில் மாற்றம் செய்ய பொதுமக்கள் பலரும் அரசின் இ-சேவை மையத்தை அனுகியுள்ளனர்.
அப்போது அவர்களின் ஊரின் பெயரான எடப்பாடி என்பது எடுபிடி என்று மாறியுள்ளது.

ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்யும்போது ஊரின் பின்கோடு எண்ணைப் பதிவிடும் பொது ஆங்கிலத்தில் எடப்பாடி என்றும், தமிழில் வரும்போது எடுபிடி என்றும் வந்துள்ளது.

நடவடிக்கைத் தேவை (Action required)

இ-சேவை மையம் மட்டுமல்லாமல், பல இணையதள சேவை மையங்களிலும் இதே நிலை நீடிப்பதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் அரசு அதிகாரிகள் உடனடியாக நவடிக்கை எடுத்து ஊரின் பெயரை தமிழில் சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

பூச்சிமருந்து அடிக்கும் தேனீக்கள்- மாற்றிச் சிந்தித்த விஞ்ஞானிகள்!

நெல் சாகுபடியில் உயர் விளைச்சலுக்கு வித்திடும் நுண்சத்துக்கள்!

English Summary: Edapady name changed to edupidi! Published on: 14 December 2021, 11:18 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.