1. மற்றவை

போலீஸாக வேலைவாய்ப்பு- தகுதி 10 ஆம் வகுப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Employment as Police- Eligibility 10th Class!

கண் முன்னே நடக்கும் அநியாயத்தைத் தட்டிக்கேட்க பலருக்கு துணிச்சல் வரும். ஆனாலும் எதிர்விளைவுகளை எண்ணும்போது, முயற்சிகள் பின்னடைவைச் சந்திக்கும். ஆனால், தவறுசெய்பவர்களைத் தட்டிக்கேட்கும் அதிகாரம் வேண்டும் என்றால் நாம் போலீஸாக இருக்கணும்.

அப்படி போலீஸ் ஆக காவல்துறையில் சேர ஆசையா? தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலைக் காவலருக்கான 3,552 பணியிடங்கள் விரைவில் புதிய நபர்களைக் கொண்டு நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக இளைஞர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TAMIL NADU UNIFORMED SERVICES RECRUITMENT BOARD) இந்த இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை இரண்டாம் நிலைக் காவலர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டப் பணியிடங்களை நிரப்ப உள்ளது. இந்த அறிவிப்பில் தமிழகம் முழுவதும் மொத்தம் 3,552 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

காவல்துறை

இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை)

2,180 (ஆண் – 1,526, பெண்/ திருநங்கை – 654)

இரண்டாம் நிலைக் காவலர் (தமிழ்நாடு சிறப்புக் காவல் படை)

1,091 (ஆண்கள் மட்டும்)

சிறை மற்றும் சீர்திருத்தத்துறை

இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை): 161 (ஆண் – 153, பெண்/ திருநங்கை – 8)

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை

தீயணைப்பாளர்: 120 (ஆண்கள் மட்டும்)

வயதுத் தகுதி (Age limit)

01.07.2022 அன்று 18 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் BC, BC (M), MBC/DNC பிரிவினர் 28 வயது வரையிலும், SC, SC(A), (ST) மற்றும் திருநங்கைகள் 31 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி(Educational Qualification)

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் 

ரூ.18,200 – 67,100

எழுத்துத் தேர்வு

எழுத்துத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதில் குறைந்தபட்சம் 40% அல்லது 32 மதிப்பெண்கள் பெற வேண்டும். இல்லையென்றால் இரண்டாம் பகுதி மதிப்பீடு செய்யப்படாது.
இரண்டாம் பகுதியில் பொது அறிவு மற்றும் உளவியல் சார்ந்த வினாக்கள் கேட்கப்படும். இது 70 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். எழுத்துத் தேர்வு கொள்குறி வகை வினாக்கள் அடங்கியதாக இருக்கும்.

உடற்தகுதி தேர்வு

எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தகுதி பெறுபவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெறும். இது 24 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.


விண்ணப்பக்கட்டணம் (Fee) :

ரூ.250

விண்ணப்பிக்கும் முறை (How to apply)

இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பச் செயல்முறை 07.07.2022 முதல் தொடங்குகிறது. விண்ணப்பிக்க tnusrbயின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி (Last date)

15.08.2022

மேலும் படிக்க...

மரத்தடி வைத்தியரிடம் சிகிச்சை எடுத்துவரும் தோனி!

ஆடிப்பட்டத்தில் காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு- TNAU கணிப்பு!

English Summary: Employment as Police- Eligibility 10th Class! Published on: 04 July 2022, 11:39 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.