ஓலா 10,000 பேரை வேலைக்கு நியமிக்க திட்டமிட்டுள்ளது. எனவே, வேலை தேவைப்படுபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
பன்னாட்டு ரைடு ஷேரிங் நிறுவனமான ஓலா, 'Ola Cars' எனப்படும் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான விற்பனைத் தளத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம், வீட்டில் இருந்தபடியே பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கலாம். மேலும், இதன் மூலம், மாதாந்திர தவணை வசதிகளும், ஒரு வருட உத்தரவாதமும் வழங்கப்படுகிறது.
எனவே, 10,000 பேரை வேலைக்கு சேர்க்க ஓலா திட்டமிட்டுள்ளது. இது ஓலாவுடன் இணைந்து பணியாற்ற இது சிறந்த தேர்வாக இருக்கும். அடுத்த 12 மாதங்களில் ஓலா கார்ஸ் வாகன வர்த்தக தளம், 2 பில்லியன் மொத்த வர்த்தக மதிப்பு (gross merchandise value (GMV)) செய்ய திட்டமிட்டிருப்பதாக நிறுவனம் கூறியுள்ளது.
அடுத்த 2 மாதங்களில் ஓலா கார்கள் 30 நகரங்களில் செயல்படும் மற்றும் அடுத்த ஒரு வருடத்தில் மேலும் 100 நகரங்களுக்கு தொழிலை விரிவுபடுத்தப்படும் என்றும் ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவாகியுள்ளது. ஒரு மாதத்தில் 5,000 பயன்படுத்திய கார்களை விற்றுள்ளதாக ஓலா கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
"வரும் மாதங்களில் ஓலா கார்கள் விற்பனை மற்றும் சேவை மையங்கள் உட்பட முக்கிய துறைகளில் 10,000 பேரை அமர்த்த திட்டமிட்டிருக்கிறோம்" என்று ஓலா கார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அருண் தேஷ்முக்(Arun Deshmukh) தெரிவித்துள்ளார்.
டெல்லி, மும்பை, புனே, பெங்களூரு, சென்னை, ஐதராபாத் மற்றும் அகமதாபாத் போன்ற இடங்களில் ஓலா, வாகனங்களை விற்கத் தொடங்கியுள்ளது. இந்த வார இறுதிக்குள், சண்டிகர், ஜெய்ப்பூர், கொல்கத்தா மற்றும் இந்தூர் போன்ற நகரங்களில் விரிவுபடுத்தப்படும்.
ஓலா தனது OLA கார்களுக்கான சேவை மையங்களை இந்தியாவில் பல்வேறு நகரங்களில் அமைக்கிறது. அதன் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி விரிவாக தெரிவித்த ஓலா, தனது OLA Cars மூலம் மற்ற வாகன பிராண்டுகளின் புதிய வாகனங்களையும் விற்பனை செய்வதாக கூறியுள்ளது.
மேலும் படிக்க:
OLA தொழிற்சாலையில் 10,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு!
தொடங்கியது ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை! முன்பதிவு செய்யுங்கள்!
Share your comments