ஒவ்வொரு மாதமும் ரூ.30,000 - ரூ.40,000 சம்பளம் வாங்கினால் போதுமா? ஓய்வுக்குப் பின்னர் இதிலுள்ள சேமிப்புப் பணத்தை வைத்து காலத்தை ஓட்ட முடியாது. ஓய்வு காலத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு தொகை நிலையாக வந்துகொண்டிருந்தால் அது பெரும் உதவியாக இருக்கும்.
ஓய்வூதியம்:
உங்களுக்கு இப்போது 45 வயது என்று வைத்துக்கொள்வோம். உங்களிடம் ரூ.2 கோடி சேமிப்புப் பணம் (Savings Money) இருந்தால் அதை சரியான திட்டங்களில் முதலீடு செய்தால், உங்களது ஓய்வுக் காலத்தில் நிலையான வருமானத்தை ஈட்ட முடியும். உங்களது சேமிப்புக் கணக்கில் ரூ.80 லட்சம், பிஎஃப் (PF) கணக்கில் ரூ.80 லட்சம், பிபிஎஃப் (PPF) கணக்கில் ரூ.10 லட்சம், தேசிய பென்சன் திட்டத்தில் ரூ.3.5 லட்சம், பங்குச் சந்தையில் ரூ.30 லட்சம் இருப்பாக வைத்துக்கொள்வோம். உங்களது மாதாந்திர செலவு ரூ.2 லட்சமாக இருந்தால், இந்தத் தொகையை வைத்து இரண்டு ஆண்டுகள் கழித்து ஓய்வுக்குப் பின்னர் மாதம் ரூ.2 லட்சம் வருமானம் பெறுவதற்கு 12 சதவீத ரிட்டன் தரும் திட்டத்தில் பணத்தைப் போட வேண்டும்.
சரியான முதலீடு
தற்போதைய காலத்தில் மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund) போன்ற முதலீட்டுத் திட்டங்களில் 7 முதல் 8 சதவீத லாபமே கிடைக்கிறது. எனவே ரூ.2 கோடி முதலீட்டுப் பணத்தை வைத்து மாதம் ரூ.2 லட்சம் வருமானம் ஈட்டுவது கடினமான ஒன்றுதான். ஒன்று முதலீட்டுத் தொகையை உயர்த்த வேண்டும்; அல்லது பணிபுரியும் காலத்தை நீட்டித்து ஓய்வுக் காலத்தை அதிகரிக்க வேண்டும். ரிஸ்க் இல்லாத முதலீடாக இருந்தால் இதுதான் சரியான தேர்வாக இருக்கும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
வருமான வரியை சட்ட ரீதியாக எப்படி சேமிக்கலாம்? சூப்பர் டிப்ஸ்!
தமிழகத்தில் தொடங்கியது கொரோனா தடுப்பூசி திருவிழா
Share your comments