MFOI சம்ரித் கிசான் உத்சவ் நிகழ்வானது விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவதையும், வளமான இந்தியாவின் வளர்ச்சிக்கு வேளாண் பங்களிப்பினை உறுதி செய்வதையும் முதன்மை நோக்கமாக கொண்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கிரிஷி ஜாக்ரன் முன்னெடுப்பில் நடைப்பெற்று வருகிறது. அந்த வகையில், இன்றைய தினம் ஆக்ரா அருகேயுள்ள பிச்புரி பகுதியில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் மையத்தில் வெகு விமர்சையாக நிகழ்வு நடைப்பெற்றது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ரா பகுதியில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் மையத்தில் (KVK), மஹிந்திரா டிராக்டர் மற்றும் JCB நிறுவன ஆதரவுடன் நடைப்பெற்ற MFOI சம்ரித் கிஷான் உத்சவ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வேளாண் துறை வல்லுநர்கள் வருமானத்தை அதிகரிப்பது பற்றிய நுண்ணறிவை விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.
மில்லினியர் விவசாயிகள் கௌரவிப்பு:
ஆக்ரா பகுதியில் முற்போக்கு விவசாயியாக திகழும் லகான் சிங் தியாகி, நரேந்திர சிங் ஆகியோர் தாங்கள் மேற்கொண்டு வரும் வேளாண் பணிகளை குறித்தும், அதில் சந்தித்த சவால்களை கையாண்ட விதம் குறித்தும் ஆற்றிய உரை விவசாயிகளுக்கு உத்வேகம் அளித்தது. நிகழ்வின் முக்கிய பகுதியாக, முன்னோடி விவசாயிகள் கௌரவிக்கப்பட்டனர்.
ஆக்ரா வேளாண் அறிவியல் மையத்தின் தலைமை பொறுப்பாளர் மற்றும் விஞ்ஞானியுமான ராஜேந்திர சிங் சவுகான் வந்திருந்த விவசாயிகளுக்கு புதிய ஆலோசனைகளையும், அவர்களது சந்தேகங்கங்களுக்கு தீர்வுகளையும் தனது உரையில் வழங்கினார். ஆக்ரா வேளாண் அறிவியல் மையத்தின் மண்ணியல் துறை விஞ்ஞானி சந்தீப் சிங் மற்றும் கால்நடை அறிவியல் துறை விஞ்ஞானி தேவேந்திர சிங் ஆகியோர் தங்களது துறை சார்ந்து, விவசாயிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.
இவர்கள் தவிர்த்து மஹிந்திரா டிராக்டரின் மண்டல சந்தைப்படுத்தல் மேலாளர் சிவம் யாதவ், டிராக்டர் பராமரிப்பு மற்றும் டிராக்டர் தொழிலில் தற்போதைய புதுமையான நடைமுறைகள் பற்றி பேசினார்.
சோமானி விதை நிறுவனத்தின் சன்பு யாதவ், JCB மண்டல விற்பனை மேலாளர் மோகித் சர்மா ஆகியோர் முறையே சோமானி நிறுவனத்தின் விதைகளின் தன்மை குறித்தும், JCB பயன்பாடு குறித்தும் விளக்கினார். 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற இந்த நிகழ்வில் மஹிந்திரா டிராக்டர் நிறுவனமும், JCB நிறுவனமும் தங்களது இயந்திரங்களை விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தி அதுத் தொடர்பாக விளக்கமும் அளித்தார்கள்.
MFOI 2024- விண்ணப்பங்கள் வரவேற்பு:
MFOI 2023- நிகழ்வினைத் தொடர்ந்து, Millionaire Farmer of India Awards 2024- நிகழ்வுக்கு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டுக்கான நிகழ்வில் ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளதாகவும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. MFOI விருதுகள் 2024- நிகழ்வானது, டிசம்பர் 1 முதல் டிசம்பர் 3,2024 வரை டெல்லியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more:
PM kisan 17 வது தவணை: பிரதமரின் முதல் கையெழுத்து விவசாயிகளுக்காக!
NADCP திட்டம்: கால்நடைகளுக்கு கோமாரி நோய் வராமல் தடுக்க ஒரு வாய்ப்பு
Share your comments