மீன்கள் இன விருத்திக்காக, ஏப்ரல் 15ம் தேதி முதல் தமிழகத்தில் மீன்பிடித்தடைக்காலம் நடைமுறைக்கு வருகிறது.
மீன்கள் இனப்பெருக்கம் (Fish breeding)
ஆழ்கடல் பகுதியில் வாழும் மீன்களின் இனப்பெருக்கத்தை மேம்படுத்தும் வகையில், தமிழகத்தில் ஆண்டுதோறும் மீன்பிடிக்கத் தடைக்காலம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
61 நாட்கள் தடை (61 days ban)
பொதுவாக ஏப்ரல் மாதம் 15ந் தேதி முதல் என் மாதம் 14ந் தேதி வரை இந்த மீன்பிடித் தடைக்காலம் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம்.
இவ்வாறு சுமார் 60 நாட்கள் மீன்பிடிக்காமல் இருப்பதன் மூலம் மீன் வளத்தை பெருக்க முடியும் என நம்பப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் இந்த மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் வருகிற 15ம் தேதி முதல் தொடங்குகிறது. எனவே ஏப்ரல் 15ம் தேதி முதல் ஆழ்கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கரை திரும்ப உத்தரவு (Order to return to shore)
இதற்கு ஏதுவாக, ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் கரை திரும்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மீன்வளத்துறைக் கடிதம் (Fisheries letter)
இது தொடர்பாக விசைப்படகு உரிமையாளர்கள் சங்க தலைவர்களுக்கு மீன்வளத்துறை உதவி இயக்குநர் வேலன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தின் கிழக்கு, மேற்கு கடல் பகுதியில் ஆண்டுதோறும் மீன் இனப்பெருக்கக் காலமான ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.
இதன்படி கிழக்கு கடற்கரை பகுதிகளான திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை மீன்பிடி விசைப்படகுகள், இழுவை படகுகள் மூலமாகக் கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
விலக்கு (Exclude)
அதேநேரத்தில், பாரம்பரிய மீன்பிடி படகுகளுக்கு மீன்பிடித் தடைக்காலத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எனவே விசைப்படகுகள், இழுவை படகுகள் மூலமாக 61நாட்களுக்கு கடலுக்குச் சென்று மீன்பிடிக்க வேண்டாம். கடலுக்குச் சென்றுள்ள படகுகள் அனைத்தும் வருகிற 14-ம் தேதி இரவுக்குள் மீன்பிடித் துறைமுகத்துக்குத் திரும்ப வேண்டும்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
குறைந்த முதலீட்டில் மெகா லாபம் தரும் மலர் வியாபாரம்!
பூக்காதச் செடிகளையும் பூக்கவைக்கும், ஆரஞ்சு தோல் பூச்சிக்கொல்லி!
Share your comments