1. மற்றவை

ஃபிக்சட் டெபாசிட்: மூத்த குடிமக்களுக்கு வட்டியை உயர்த்தியது HDFC வங்கி!

R. Balakrishnan
R. Balakrishnan

Senior citizens

கடந்த சில மாதங்களாகவே பல வங்கிகள் சீனியர் சீடிசனுக்களுக்கான நிலையான வைப்புத்தொகை எனப்படும் Fixed Deposit மீதான வட்டியை உயர்த்தியுள்ளன. அதில் பாரத் ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கியும் அடங்கும்.

சீனியர் சிட்டிசன் (Senior citizens)

பொதுவாக சீனியர் சிட்டிசன்கள் தங்கள் சேமிப்பில் ஒரு பகுதியை FD களில் முதலீடு செய்கிறார்கள்.இது அவர்களுக்குத் தேவையான பணப்புழக்கத்தை வழங்குகிறது மற்றும் வட்டி வருமானத்தை அவ்வப்போது உறுதி செய்கிறது. தவிர, இச்சேமிப்பு அவர்களுக்கு ஏதேனும் அவசரகாலத்திற்குத் தேவைப்படும் கார்பஸ் தொகையை உருவாக்கவும் உதவியாக இருக்கும். HDFC வங்கி டயமண்ட் டெபாசிட்டுகள் எனும் பெயரில் 75 மாதங்கள் லாக்-இன் காலம் இருக்கு நிலையான வைப்புத்தொகைக்கு ஆண்டுக்கு 8% வட்டியை வழங்குகிறது. இதற்கான குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.2 கோடியாகும். இதில் ஆன்லைன் மூலம் புதுப்பிக்கவும், பணத்தை டெபாசிட் செய்தால் ஒட்டுமொத்த கூடுதல் ஊக்கத்தொகையாக 0.05% வழங்குகிறது.

HDFC வங்கி அதன் சில்லறை முதன்மை கடன் விகிதத்தை 9.20% ஆகவும் உயர்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி வீட்டுக்கடன் சில்லறை பிரைம் லெண்டிங் ரேட்டை (ஆர்பிஎல்ஆர்) உயர்த்தியுள்ளது, மேலும் அட்ஜஸ்டபிள் ரேட் வீட்டுக் கடன்கள் (ஏஆர்ஹெச்எல்) 25 அடிப்படை புள்ளிகளாகவும் உயர்த்தியுள்ளது. இவ்வட்டி விகிதங்கள் மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில், இந்திய ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை காரணம் காட்டி பெஞ்ச்மார்க் பாலிசி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 6.5 சதவீதமாக அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து அனைத்து வங்கிகளும் அதன் MCLR வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. அதில் குறிப்பாக SBI வங்கி MCLR வட்டி விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் வரையில் உயர்த்தியுள்ளது.

மேலும் படிக்க

பென்சன் வாங்குவோர் கவனத்திற்கு: ஏப்ரல் 1 முதல் இது கட்டாயம்!

திருப்பதி லட்டு இனி பனை ஓலைப் பெட்டியில் விநியோகம்: தேவஸ்தானம் அறிவிப்பு!

English Summary: Fixed Deposit: HDFC Bank hikes interest rates for senior citizens!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.