முதலீட்டில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் முதலில் தேர்ந்தெடுக்கும் முதலீட்டுத் திட்டம் தான் வைப்பு நிதி எனப்படும் ஃபிக்சட் டெபாசிட் திட்டம். கடந்த சில மாதங்களாக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இந்நிலையில் மே 2022 இல் ரிசர்வ் வங்கி 6.50% வட்டி விகித உயர்வை அறிவித்தது.
வைப்பு நிதி வட்டி (Fixed deposit)
வங்கிகள் வாடிக்கையாளர்களை ஈர்க்க கவர்ச்சிகரமான வட்டி விகித உயர்வுகளை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது ஃபிக்சட் டெபாசிட் முதலீட்டாளர்களுக்கு ஒரு இன்பச் செய்தி எனக் கூறலாம்.
பல்வேறு வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. அதிலும் சில ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள் (Small finance banks) பொது வாடிக்கையாளர்களுக்கே 9% முதல் 9.5% வரை வட்டி வழங்கி வருகின்றன. அவ்வகையில் 9.5% அளவுக்கு வட்டி வழங்கும் சில ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளை பற்றி பார்க்கலாம்.
யூனிட்டி ஸ்மால் பைனான்ஸ் வங்கி
- 7 நாட்கள் - 10 ஆண்டுகள் : 4.50% - 9%
- சீனியர் சிட்டிசன்களுக்கு : 4.75% - 9.50%
உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி
- 7 நாட்கள் - 10 ஆண்டுகள் : 4% - 7.75%
- சீனியர் சிட்டிசன்களுக்கு : 5% - 8.50%
சூர்யோதயா ஸ்மால் பேங்க்
- 7 நாட்கள் - 10 ஆண்டுகள் : 4.00% - 8.51%
- சீனியர் சிட்டிசன்களுக்கு : 4.75% - 8.76%
நார்த்-ஈஸ்ட் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்
- 7 நாட்கள் - 10 ஆண்டுகள் : 3% - 8.11%
- சீனியர் சிட்டிசன்களுக்கு : 3.75 – 8.75% வரை
ESAF ஸ்மால் பைனான்ஸ் வங்கி
- 7 நாட்கள் - 10 ஆண்டுகள் : 4.00% - 8%
- சீனியர் சிட்டிசன்களுக்கு : 4.50 - 8.50% வரை
மேலும் படிக்க
வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,500: மாநில அரசின் அருமையான திட்டம்!
அஞ்சல் சேமிப்புத் திட்டங்களுக்கு ஏப்ரல் 1 முதல் விதிமுறைகள் மாற்றம்!
Share your comments