உயிரிழந்த தாய்க்கு கோவில் கட்டி, சிலை அமைத்து வழிபாடு செய்து வரும், 13வது மகனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
சென்னை மணலி, ஹரிகிருஷ்ண பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ராமதாஸ், 30 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இவர் மனைவி சிவகலை, 84. இந்த தம்பதிக்கு 10 மகன்கள், மூன்று மகள்கள் என, 13 பிள்ளைகள்.சிவகலையின் கணவர் பல ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில் கடந்த ஆண்டு அவரது, 12வது மகன் கோட்டீஸ்வரன், கொரோனாவால் இறந்தார். இந்த அதிர்ச்சியால், மூன்று நாட்களில் சிவகலையும் உயிரிழந்தார். நேற்று முன்தினம், சிவகலையின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
தாய்க்கு சிலை
சிவகலையின் 13வது மகனான சரவணன், மாமல்லபுரம் சிற்ப கலைஞர் ஒருவரிடம், தன் தாய்க்கு சிலை வடிக்க கோரினார். தன் வீட்டின் முன், தாயின் மார்பளவு சிலையை பிரதிஷ்டை செய்து, சரவணன் கோவில் எழுப்பினார். சிலைக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு படையல் வைக்கப்பட்டது. இதில் சிவகலையின் பிள்ளைகள், பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்திகள் என, 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அன்னதானம்
மேலும், 501 பேருக்கு அன்னதானம்; 50 பேருக்கு புடவை உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கி, சிவகலையின் குடும்பத்தினர் நெகிழ்ந்தனர்.
மேலும் படிக்க
இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் டபுள் டக்கர் பாலம்!
CBSE பாடத்தில் தமிழகத்தைச் சேர்ந்த யோகா பாட்டிக்கு அங்கீகாரம்!
Share your comments