மாதர் தம்மைப் போன்றுவோம் என்ற பாரதியின் வரிகளுக்கு இணங்க, மகப்பேறு பெற்ற பெண்களுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது மத்திய அரசு. இதற்காக அறிமும் செய்யப்பட்டுள்ளத் திட்டத்தின் கீழ், கர்ப்பிணிகளுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது.
மகளிரின் பங்களிப்பை அதிகரிக்கவும், மகளிருக்கு உதவும் வகையிலும் மத்திய – மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன. அதிலும், கர்ப்ப காலத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் பெண்களுக்காக செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் அமோக வரவேற்றைப் பெற்றுள்ளது
மத்திய அரசு நிதியுதவி
தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் பலர், மகப்பேறு காலத்திற்கு பிறகு, பணிக்குச் செல்ல இயலாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அவ்வாறு பாதிக்கப்படும் பெண்களின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மாத்ரித்வா வந்தனா யோஜனா என்ற இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் திருமணமான பெண்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது.
பெண்களுக்கு உதவி
நாடு முழுவதும் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருக்கக்கூடாது, மேலும் எந்த விதமான நோயும் ஏற்படக்கூடாது என்கிற நோக்கத்துடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
முக்கிய அம்சங்கள்
- கர்ப்பிணிப் பெண்களின் வயது 19 ஆக இருக்க வேண்டும்.
- இந்த திட்டத்தில் நீங்கள் ஆஃப்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
- இந்த திட்டத்தில் அரசு 6000 ரூபாயை 3 தவணைகளில் அனுப்பி வைக்கும்.
- இந்த திட்டம் கடந்த ஜனவரி 1, 2017 அன்று மோடி அரசால் தொடங்கப்பட்டது.
பணம் எப்படி வழங்கப்படும்
இத்திட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு கட்டமாக 1000 ரூபாயும், இரண்டாம் கட்டமாக 2000 ரூபாயும், மூன்றாம் கட்டமாக 2000 ரூபாயும் வழங்கப்படுகிறது. அதே சமயம் கடைசி தவணையாக 1000 ரூபாயை குழந்தை பிறக்கும் போது அரசு மருத்துவமனையில் வழங்கப்படும்.
தொடர்புக்கு
இதனிடையே இந்தத் திட்டத்தில் ஏதேனும் சிக்கல்களை நீங்கள் சந்தித்தால், உடனடியாக அதிகாரப்பூர்வ ஹெல்ப்லைன் எண்ணான 7998799804ஐத் தொடர்புகொள்ளலாம். அரசிடம் இருந்து பெறப்படும் தொகை நேரடியாக வங்கி கணக்கிற்கு மாற்றப்படும்.
மேலும் படிக்க…
ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்- விவசாயிகளின் பரிதாப நிலை!
ஒரு லட்சம் ரூபாய் பைக்கிற்கு, ஒரு கோடி ரூபாய்க்கு நம்பர் பிளேட்!
Share your comments