1. மற்றவை

பட்டதாரிக்கு இந்திய குடிமைப் பணிக்கான போட்டித்தேர்வில் சிறப்பிக்க Free Coaching

Deiva Bindhiya
Deiva Bindhiya
Free Coaching for Graduate to excel in Indian Civil Service Examination

அமைச்சர் மீன்வளம், நிதி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம் அவர்கள் 12.11.2017 அன்று சட்ட பேரவையில் அறிவித்ததன்படி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் 20கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப்பணிகளுக்கான போட்டித்தேர்வில் கலந்துகொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டது.

கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் (Application Form) மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை (Guidelines) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை சென்னை மண்டலம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் அலுவலகத்திலோ அல்லது சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திலோ அலுவலக வேலை நாட்களில் விலையின்றி பெற்று கொள்ளலாம்.

விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையத்தளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவர்யில் உள்ள சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூகமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு சென்னை மண்டலம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் அலுவலகம் அல்லது சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

அலுவலக முகவரி: மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி

                                இயக்குநர் அலுவலகம்,

                                எண்.77, சூரியநாராயணா செட்டி தெரு,

                                இராயப்புரம், சென்னை-13

அலுவலக தொலைபெசி எண்: 044-29997697

மேலும் படிக்க:

MSP: குறுவை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அமைச்சரவை ஒப்புதல்

விரைவில் பிறப்பு சான்றிதழுடன் ஆதார் எண் வழங்க ஏற்பாடு

English Summary: Free Coaching for Graduate to excel in Indian Civil Service Examination Published on: 28 October 2022, 02:09 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.