இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 காரட் கிராம் ஒன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,466 ஆக உள்ளது. ஒரு பவுன் தங்கம் ரூ. 35,728-க்கு விற்பனையில் உள்ளது.
தங்கம் என்பது நம் நாட்டு மக்களுடன் இணைந்த ஒரு விஷயமாகும். ஆபரணமாக அணிந்து அழகு பார்ப்பதற்கும், முதலீடாக வாங்கி சேமித்து வைத்திருக்கவும், பங்குச் சந்தையில் வாங்கி விற்று பணம் ஈட்டவும், கவுரவத்தின் அடையாளமாகவும், மக்கள் இதை ஒவ்வொரு விதத்தில் வைத்திருக்க விரும்புகிறார்கள். அனைத்து வித விசேஷங்களிலும் தங்கத்துக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது.
இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,466 ஆக இருக்கின்றது. ஒரு சவரன் தங்கம் ரூ. 35,728-க்கு விற்பனையில் உள்ளது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.68.40-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.68,400 ரூபாய்க்கும் விற்பனை ஆகின்றது.
இந்தியாவில், டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, டெல்லியில் 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.110 ஆக குறைந்து ரூ. 46,600 ஆகவும் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 140 ஆக குறைந்து ரூ. 50,800 ஆகவும் இருக்கின்றது.
கொல்கத்தாவில் 22 கேரட் 10 கிராம் தங்கம் 46,950 ரூபாய்க்கும் 24 கேரட் 10 தங்கம் ஒரு கிராம் 49,650 ரூபாய்க்கும் விற்பனையில் உள்ளது. மும்பையில், 22 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 46,500 ஆகவும் 24 கேரட் 10 கிராம் தங்கம் ரூ. 47,500 என்ற விலையிலும் விற்பனையில் உள்ளது.
வெள்ளி விலை (Silver Rate) மும்பை, கொல்கத்தா மற்றும் டெல்லியில் கிலோ ஒன்று ரூ. 63,600 ஆக விற்க படுகிறது.
சர்வதேச சந்தை நாணய விலை மாற்றம், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதம், நகை சந்தை, புவியியல் பதற்றம், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணிகள் தங்கத்தின் விலையை பாதிக்கக்கூடும்.
உலகளாவிய சந்தைகளில் நேர்மறையான அணுகுமுறை இருப்பதால், தங்கத்தில் முதலீடு செய்ய இது சரியான நேரம் என்றும் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
பல்வேறு நகரங்களில் வரி (Tax) வகைகளைப் பொறுத்து தங்கத்தின் விலை வேறுபடுகிறது. மேலும், செய்கூலி மற்றும் சேதாரத்தின் அடிப்படையில் கடைக்கு கடை தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும்.
மேலும் படிக்க:
Share your comments