சென்னையில் தங்கம் விலை 2 நாட்களில் சவரனுக்கு 456ரூபாய் உயர்ந்துள்ளது, வாடிக்கையாளர்களைக் கவலை அடையச் செய்துள்ளது.
தனி கவுரவம் (Individual honour)
தங்கத்தை ஆபரணமாக அணியும்போது, சமூக அந்தஸ்தைப் பொறுத்தவரையில், தனி கவுரவமாகவேப் பார்க்கப்படுகிறது.கவுரவம் என்பதைவிட,அவசரக் காலங்களில் பணத்தைப் பெற உதவும் காரணிகளில் தங்கம் முக்கியமானதாகவும் கருதப்படுகிறது.
பாதுகாப்பான முதலீடு (Secure investment)
அதுமட்டுமல்லாமல் தங்கத்தின் மீதான் முதலீடு என்பது நம் பணத்திற்கான மிகச் சிறந்த பாதுகாப்பாகவும் பார்க்கப்படும். இத்தகையக் காரணங்களால், தங்கம் மீது மக்களுக்கு எப்போதுமே ஒருவித ஈர்ப்பு இருக்கும். இதனாலேயே தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்றம் இருந்து வருகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டில் இறுதியில் இருந்தே தங்கத்தின் விலையில் உயர்வு காணப்பட்ட நிலையில், புத்தாண்டில் தங்கத்தில் விலை ஷாக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
ரூ.36,000 தாண்டியது (Exceeds Rs.36,000)
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பவுன் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் விலையில் பெரிய அளவில் குறைவு காணப்படவில்லை. 2021ம் ஆண்டின் இறுதிநாளான நேற்று பவுனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.36 ஆயிரத்து 152-க்கு விற்பனையானது.
இருப்பினும் 2022ம் ஆண்டின் தொடக்கத்திலும், விலை உயர்வுத் தொடர்கிறது. இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.36 ஆயிரத்து 472-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.4 ஆயிரத்து 559 ஆக உள்ளது.
கூடுதல் சுமை (Extra load)
வெள்ளி கிலோவுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.66 ஆயிரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.66.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் விலை மாற்றத்திற்கு ஏற்ப, இந்தியாவிலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. இருப்பினும், திருமணம் உள்ள சுப நிகழ்ச்சிகளை வைத்திருப்பவர்களுக்கு இந்தத் தங்கம் விலை உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments