இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஏதெர் எனர்ஜி, தெற்கு ரயில்வேயுடன் இணைந்து சென்னையில் உள்ள 10 மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் (MRTS) மற்றும் புறநகர் ரயில் நிலையங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. ஸ்மார்ட் மற்றும் இணைக்கப்பட்ட சார்ஜிங் சூழலை உருவாக்குதல், வாகனம் செல்லக்கூடிய தூரம் தொடர்பான வரம்புகள் பற்றிய கவலையைப் போக்குதல் மற்றும் நாட்டில் மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிப்பது போன்ற நிறுவனத்தின் தொலைநோக்கு இலக்குகளுக்கு உதவுவதே இந்த கூட்டாண்மையின் நோக்கமாகும்.
சார்ஜிங் சென்டர் (Charging Center)
இந்திய மின்சார வாகனப் பிரிவில் ஒரு முன்னோடியாக இருந்துவரும் ஏதெர் எனர்ஜி நிறுவனம், மின்சார வாகனங்களுக்கான முழு சூழலையும் சார்ஜிங் தீர்வுகளைக் கொண்டு மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளது. தெற்கு ரயில்வேயுடனான இந்த கூட்டு முயற்சியானது, ஒவ்வொரு MRTS/புறநகர் ரயில் நிலையத்திலும் சார்ஜிங் பகுதியை நிறுவுவதற்காக 100 சதுர அடி பரப்பளவில் ஒரு பிரத்யேக இடத்தை ஏதர் எனர்ஜிக்கு வழங்கவுள்ளது. இதன் மூலம் அந்நிறுவனத்தால் ஒரே இடத்தில் மூன்று சார்ஜர்களை நிறுவமுடிகிறது.
இது சென்னையில் உள்ள மின்சார வாகன (EV) உரிமையாளர்களுக்கு சார்ஜிங் உள்கட்டமைப்பினை அணுகுவதற்கும், சௌகரியத்தை அதிகரிக்கவும் உதவும். துரிதமாக சார்ஜிங் செய்யக்கூடிய இந்த ‘ஃபாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க்கை’ அனைத்து மின்சார இரு சக்கர வாகனங்கள் மற்றும் மின்சார நான்கு சக்கர வாகனங்களின் உரிமையாளர்களும் பயன்படுத்தலாம்.
ஏதெர் எனர்ஜி
ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் சார்ஜிங் உட்கட்டமைப்பு பிரிவின் தலைமை அலுவலர், அரவிந்த் பிரசாத் கூறுகையில், தெற்கு ரயில்வேயுடனான எங்கள் கூட்டணியானது, சென்னையில் உள்ள MRTS/புறநகர் ரயில் நிலையங்களில் 10 ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை நிறுவ அனுமதிப்பதோடு, சார்ஜிங் வசதியை அணுகக்கூடியதாகவும் ஆக்குகிறது. இதனால் சென்னை மாநகரில் மின்சார வாகனங்களுக்கு மக்கள் மாறுவதை ஊக்குவிக்கும் தொலைநோக்கு இலக்கும் பூர்த்தியாகும். இதுபோன்ற நிறைய PPP (பொதுத்துறை-தனியார் கூட்டாண்மை) மாடல்களுக்கும், மின்சார வாகன போக்குவரத்து (இ-மொபிலிட்டி) வசதிகளை வடிவமைப்பதற்கும் வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.
சார்ஜிங் நெட்வொர்க்
தற்போது 1200க்கும் மேற்பட்ட ஏதெர் கிரிட்ஸ் எனப்படும் ஃபாஸ்ட் சார்ஜிங் பாயின்ட்களைக் கொண்டுள்ள ஏதெர் எனர்ஜி நிறுவனம் இருசக்கர வாகனங்களுக்கான மிகப்பெரிய ஃபாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது.
இந்நிறுவனம் அனைத்து OEM-களுக்குமான (அசல் சாதன உற்பத்தியாளர்) சார்ஜிங் கனெக்டருக்கான IP-ஐ வெளியிட்டுள்ளது; இதனால் பல்வேறு இரு சக்கர வாகனங்களுக்கும் பொருந்தும் வகையில் இயங்கக்கூடிய ஒரு சார்ஜிங் தளத்தினை உருவாக்க வழி வகுத்துள்ளது.
மேலும் படிக்க
இவர்கள் மட்டும் ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைக்கத் தேவையில்லை!
இரயிலில் இரவு பயணம் செய்ய புதிய விதிமுறைகள்: IRCTC அறிவிப்பு!
Share your comments