1. மற்றவை

அரசு ஊழியர்களுக்கு 10 நாட்களுக்கு சம்பளம் கிடையாது- அதிரடி முடிவு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Government employees are not paid for 10 days - Action results!

கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளான நபர்களுடன் தொடர்பில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு சம்பளப் பிடித்தம் உள்ளிட்டப் பல்வேறு அதிர்ச்சியூட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தொடரும் கொரோனா (Corona to continue)

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸின் புதிய அலை தீவிரமாகப் பரவிவருகிறது. அதிவேகமாக பரவும் ஒமிக்ரான் வகை வைரஸ் முக்கிய காரணமாகும். இதனைத் தடுக்க பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

தடுப்பூசி பயன்பாட்டை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை தகுதியான நபர்களில் 99 சதவீத பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பாதிப்பு அதிகரிப்பு (Increased vulnerability)

கொரோனா பாதிப்பால் இதுவரை 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக துபாய் மற்றும் அபுதாபியில் கடந்த டிசம்பர் மாதத் தொடக்கத்தில் அதிகரிக்கத் தொடங்கியத் தினசரி தொற்று எண்ணிக்கை தற்போது 2,500ஆக உயர்ந்துள்ளது.

புதியக் கட்டுப்பாடுகள் (New restrictions)

  • இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அஜ்மன் அரசு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.

  • அதன்படி, கொரோனா தொற்றுக்கு ஆளான நபர்களுடன் அரசு ஊழியர்கள் நெருக்கமாக இருக்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளக் கூடாது.

  • அப்படி செய்து இரண்டாவது முறை வைரஸ் பாதிப்பிற்கு ஆளானால் அவர்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள அளிக்கப்படும் மருத்துவ விடுப்பு நாளிற்கான சம்பளம் பிடித்தம் செய்யப்படும்.

  • அதாவது சம்பளமில்லாத விடுப்பு மட்டுமே வழங்கப்படும்.

  • இது வீடுகளிலோ அல்லது அலுவலகத்தை தவிர்த்து மற்ற இடங்களிலோ நடந்தால் பொருந்தும்.

  • இந்த தவற்றைத் தொடர்ச்சியாக செய்தால் ஒருநாள் முதல் 10 நாட்கள் வரை சம்பளப் பிடித்தம் செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

  • இந்தக் கட்டுப்பாடுகளை ஊழியர்கள் முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

  • இதில் தவறு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் சம்பளப் பிடித்தம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தண்டனை (Sentence)

அஜ்மனில் கொரோனா தொற்று யாருக்காவது ஏற்பட்டால், அவர் ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு அமலில் இருக்கிறது.

அதேநேரத்தில், கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில் முகக்கவசம் அணியாமல் செல்லுதல், மற்றவர்களுடன் கை குலுக்குதல், கொரோனா பாதிப்பிற்கு ஆளான நபருடன் நெருங்கி பழகிவிட்டு அலுவலகத்திற்கு செல்வது உள்ளிட்டவை தண்டனைக்கு உரிய விஷயங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

எனவே மேற்குறிப்பிட்ட விஷயங்களை உணர்ந்து பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

கொரோனா வைரஸைத் தடுக்க மக்களின் பங்களிப்பு அவசியம்!

3ம் அலையை தடுக்க 3 முக்கிய காரணிகள்: மத்திய ஆலோசனை குழு!

English Summary: Government employees are not paid for 10 days - Action results!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2022 Krishi Jagran Media Group. All Rights Reserved.