மாதம் அரசு நிர்ணயித்த தொகைக்கும்மேல் ஒரு குறிப்பிட்ட வருமானம் ஈட்டும் நபர்கள் வரி செலுத்துவது கட்டாயமாகும். அதிலும் சிலர் அதிகப்படியான வரியை செலுத்தி வருவார்கள். அவர்களுக்காக ஒரு சிறப்பான வரி சேமிப்புத் திட்டம் குறித்து இதில் காணலாம்.
முதலீடு (Investment)
Union Long Term Equity Fund ஒரு வரி சேமிப்பான ஈக்விட்டி ஃபண்டாகும். இது யூனியன் மியூச்சுவல் ஃபண்டால் தொடங்கப்பட்ட முதலீடுகளில் நல்ல வருமானம் கொண்ட ஒரு சிறந்த தரமதிப்பீடு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாகும். யூனியன் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் என்பது, 3 வருட லாக்-இன் மற்றும் வரிச் சலுகையுடன் கூடிய திறந்தநிலை ஈக்விட்டி-இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டமாகும் (ELSS).
இந்த நிதியானது, வருமான வரிச் சட்டத்தின் 80C வரிச் சேமிப்புடன் நீண்ட கால மூலதன மதிப்பீட்டிற்கு ஏற்றது. இந்த ஃபண்ட் மதிப்பு ஆராய்ச்சி நிறுவனங்களால் 4 ஸ்டார் மற்றும் CRISIL ஆல் 4 ஸ்டார் பெற்ற ஃபண்ட் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் என்பதால், இது முதலீட்டிற்கான அதிக ரிஸ்க் உடைய திட்டமாகும்.
அக்டோபர் 31, 2022 நிலவரப்படி, ஃபண்டின் நேரடித் திட்டம்-வளர்ச்சி விருப்பத்தின் கீழ், அதன் நிர்வாகத்தின் கீழ் (AUM) ரூ. 576 கோடி சொத்து உள்ளது, அதே சமயம் நவம்பர் 24, 2022 இன் நிகர சொத்து மதிப்பு ரூ.46.6200 ஆகும். இந்த ஃபண்டில் நீங்கள் மாதம் ரூ. 10,000 என SIPஇல் முதலீடு செய்தால் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ. 3,70,000 முதல் ரூ. 5,26,395 லாபத்தை அதாவது 23.65% வருடாந்திர வருமானத்தைத் பெறலாம்.
Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.
மேலும் படிக்க
குறைந்த விலையில் வீடு, நிலம் வாங்க சூப்பர் வாய்ப்பு: பொதுத்துறை வங்கியின் மெகா ஏலம்!
7th Pay Commission: விரைவில் சம்பள உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு!
Share your comments