இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் இப்புதிய கட்டணம் மற்றும் வரி விதிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய அரசு தற்போது கிரெடிட் கார்டு வாயிலாக வருமான வரி செலுத்தும் முறையை அறிமுகம் செய்துள்ளது. இதனால் வருமான வரி செலுத்தும் முன்பு உஷாராகப் பேமெண்ட் முறையைத் தேர்வு செய்வது கட்டாயமாகும்.
வருமான வரி (Income Tax)
இனி வருமான வரித் தளத்தில் ஒவ்வொரு வருடமும் வரி செலுத்தும் போது சில பேமெண்ட் முறைகளுக்கு வசதிக் கட்டணங்கள் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆகியவற்றைச் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, சில கட்டண முறைகளைப் பயன்படுத்தி ரூ.30,000 வருமான வரி செலுத்தினால் ரூ.300 வசூலிக்கலாம்.
ஈ-பைலிங் வருமான வரி இணையதளத்தில் உள்ள 'பேமென்ட் கேட்வே' மூலம் வருமான வரி செலுத்தினால், வசதியான கட்டணங்கள் மற்றும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். கீழே காட்டப்பட்டுள்ளபடி ஐந்து கட்டண விருப்பங்களில் ஒன்றான 'பேமெண்ட் கேட்வே'-ஐ பயன்படுத்தி நீங்கள் பணம் செலுத்தினால், குறிப்பிட்ட கட்டண முறைகளுக்குப் பரிவர்த்தனை கட்டணங்கள் பொருந்தும்.
பரிவர்த்தனை கட்டணங்கள் (Transaction fees)
இந்தப் பேமெண்ட் கேட்வே தேர்வு செய்து கீழே உள்ள 'பரிவர்த்தனை கட்டணங்கள்' என்பதைக் கிளிக் செய்தால், பின்வரும் அட்டவணை காண்பிக்கப்படும். இதில் ஹெச்டிஎப்சி 12 ரூபாய், ஐசிஐசிஐ வங்கி 9, எஸ்பிஐ வங்கி 7 ரூபாய், ஆக்சிஸ் வங்கி 7 ரூபாய், பிற வங்கிகளுக்கு 5 ரூபாய். இதோடு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது
கிரெடிட் கார்டு (Credit Card)
வருமான வரியில் எவ்வளவு கூடுதலாகச் செலுத்துவீர்கள் என்பதை விளக்க, இங்கே ஒரு உதாரணம். நீங்கள் ரூ. 30,000 வருமான வரி செலுத்த வேண்டும் மற்றும் அதைக் கிரெடிட் கார்டைப் பயன்படுத்திச் செலுத்த வேண்டும் என்று வைத்துக்கொள்வோம்.
டெபிட் கார்டு மற்றும் யூபிஐ சேவைக்கு எவ்விதமான கட்டணமும் இல்லை.
வசதிக் கட்டணம்
30,000 ரூபாய்க்கு 0.85% வசதிக் கட்டணம் அதாவது convenience fee விதிக்கப்படும். இதற்கான தொகை 255 ரூபாயாக இருக்கும். வசதிக்கான கட்டணமான 255 ரூபாய்க்கு ஜிஎஸ்டி வரி பொருந்தும், 18 சதவீத வரிக்கு ரூ 45.9 ரூபாய். இவ்வாறு, கிரெடிட் கார்டு மூலம் வருமான வரி செலுத்தும் தனிநபர் ரூ. 30,000+ ரூ. 255+ ரூ. 45.9 = 30,300.9, கிட்டத்தட்ட ரூ. 301 கூடுதலாகச் செலுத்துவார்.
மேலும் படிக்க
கிசான் கிரெடிட் கார்டு டிஜிட்டல் கடன்: தமிழ்நாட்டில் அறிமுகம்!
Share your comments