மே 21 அன்று, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தற்காலிக மத்திய அரசு ஊழியர்களின் மாறக்கூடிய அகவிலைப்படி(Variable Dearness Allowance) மாதத்திற்கு 105 ரூபாயிலிருந்து 210 ரூபாயாக உயர்த்தியது. இந்த அறிவிப்பு சுமார் 1.5 கோடி தொழிலாளர்களுக்குப் பயனளிக்கும்
இந்தப் புதிய அகவிலைப்படி (DA) உயர்வானது 2021 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசில் (Central Government Employees) பணிபுரியும் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய விகிதத்தையும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு மத்திய அரசின் கீழ் பணிபுரியும் , நாடு முழுவதும் சுமார் 1.50 கோடி தொழிலாளர்களுக்கு பயனளிக்கும். தற்போதைய கொரோனா காலத்தில் இது அவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கன்வார் தெரிவித்துள்ளார்.
மத்திய துறையில் திட்டமிடப்பட்ட வேலைவாய்ப்புக்கான நிர்ணயிக்கப்பட்ட விகிதங்கள் மத்திய அரசு, ரயில் நிர்வாகம், சுரங்கங்கள், எண்ணெய் வயல்கள், முக்கிய துறைமுகங்கள் மற்றும் மத்திய அரசால் நிறுவப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும் அரசாங்கம் கூறியது. இந்த விகிதங்கள் ஒப்பந்த மற்றும் சாதாரண ஊழியர்கள் / தொழிலாளர்கள் இருவருக்கும் பொருந்தும். தொழில்துறை தொழிலாளர்களுக்கான சராசரி நுகர்வோர் விலைக் குறியீடு மாறுபட்ட உள் விலைக்கு ஏற்ப திருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share your comments