மத்திய அரசு ஊழியர்களின் வீட்டுக் கடனுக்கான எஹ்பிஏ முன்பணத்திற்கான வட்டி விகிதம் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டிக் குறைப்பு மத்திய அரசு ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எச்பிஏ
மத்திய அரசு ஊழியர்கள் வீடு கட்ட அல்லது வீடு வாங்குவதற்கு வங்கியில் இருந்து பெறும் கடனைத் திரும்ப செலுத்த ஏதுவாக, ஹவுஸ் பில்டிங் அட்வான்ஸ்(HBA) என்ற பெயரில் முன்பணம் வழங்கப்படுகிறது. அவ்வாறு பெறும் இந்தத் தொகைக்கு இதுவரை, 7.9 சதவீதம் வட்டி வசூலிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு வீடு கட்ட முன்பணம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், பணியாளர் சொந்தமாகவோ அல்லது மனைவியின் மனையிலோ வீடு கட்ட முன்பணம் எடுத்துக் கொள்ளலாம். இந்தத் திட்டம் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி துவங்கப்பட்டது.
இந்நிலையில், இந்தத் திட்டத்தில் வசூலிக்கப்பட்டுவந்த வட்டி விகிதத்தை, 7.9 சதவீதத்திலிருந்து 7.1 சதவீதமாகக் குறைத்து அரசு அறிவித்துள்ளது.
இதற்காக அரசு ஒரு அலுவலக குறிப்பாணையும் வெளியிட்டுள்ளது. அரசின் இந்த முடிவால் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நன்மை கிடைக்கும்.
பெரிய நிவாரணம்
இந்த முடிவின்படி, ஏப்ரல் 1, 2022 முதல் மார்ச் 31, 2023 வரை, அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்கும், வீடு வாங்குவதற்கும் வங்கியில் வாங்கிய வீட்டுக் கடனை அடைக்க வழங்கப்படும் முன்பணத்திற்கான வட்டி விகிதத்தில் 80 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.8 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், மத்திய அரசு ஊழியர்களின் சொந்த வீடு கனவு நிஜமாவது இன்னும் எளிதாகிவிடும். 31 மார்ச் 2023 வரை ஊழியர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். அரசாங்கத்தின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, 2023 மார்ச் 31 வரை, பணியாளர்கள் இப்போது ஆண்டுக்கு 7.1 சதவிகித வட்டியில் முன்பணம் பெறலாம். இது முன்பு ஆண்டுக்கு 7.9 சதவிகிதமாக இருந்தது.
எவ்வளவு பணம்?
அரசாங்கத்தால் வழங்கப்படும் இந்த சிறப்பு வசதியின் கீழ், மத்திய ஊழியர்கள் இரண்டு வழிகளில் இதை செய்யலாம். அடிப்படை சம்பளத்தின் படி 34 மாதங்கள் வரை அல்லது அதிகபட்சமாக ரூ 25 லட்சம் வரை ஊழியர்கள் முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம். மேலும், வீட்டின் செலவு அல்லது ஊழியர்களின் செலுத்தும் திறன் என இரண்டில் ஊழியர்களுக்கு எது குறைவாக இருக்கிறதோ, அந்தத் தொகையை முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம்.
காலஅவகாசம்
இதன் கீழ், 31 மார்ச் 2023 வரை, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 7.1% வட்டி விகிதத்தில் வீடு கட்ட அல்லது வாங்க முன்பணத்தை வழங்குகிறது.
மேலும் படிக்க...
Share your comments