1. மற்றவை

சுகாதாரக் காப்பீடு: இந்த வசதிகளும் இனிமேல் கிடைக்கும்!

R. Balakrishnan
R. Balakrishnan
Health insurance

உடல்நிலை பிரச்சினைகள் மற்றும் நோய்களுக்கு சுகாதாரக் காப்பீட்டின் கீழ் கவரேஜ் உள்ளது. ஆனால், அண்மை ஆண்டுகளாக மன நோய்களின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, மனநலன் மீதும் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.

சுகாதார காப்பீடு (Health Insurance)

பெரும்பாலான சுகாதார காப்பீடு பாலிசிகளில் மனநலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு கவரேஜ் வழங்கப்படுவதில்ல்லை. இந்நிலையில், இன்று (நவம்பர் 1) முதல் மனநலன் சார்ந்த பிரச்சினைகளுக்கும் சுகாதார காப்பீட்டு பாலிசிகளில் கவரேஜ் வழங்க வேண்டும் என இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, பழைய சுகாதார காப்பீட்டு பாலிசிகள் மற்றும் புதிய பாலிசிகளில் மனநலன் சார்ந்த நோய்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கவரேஜ் வழங்க வேண்டும். இதற்கான உத்தரவை இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையமான IRDAI பிறப்பித்துள்ளது.

இதற்கு முன் அல்சைமர், டிமென்ஷியா போன்ற மனநல வியாதிகளுக்கு சுகாதார காப்பீட்டு பாலிசிகளில் கவரேஜ் வழங்கப்படாமல் இருந்தது. இதுபோன்ற வியாதிகளுக்கும் கவரேஜ் வழங்குவதால் பாலிசிதாரர்கள் பெரிதும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுகாதார காப்பீட்டு பாலிசிகளில் மனநல வியாதிகளுக்கு வழங்கப்படும் கவரேஜில் நோய் கண்டறிந்தல், மருந்துகள், சிகிச்சை, அறை வாடகை, ஆம்புலன்ஸ் கட்டணம் போன்றவை அடங்கும். எனினும், மனநல ஆலோசனை, தியானம் போன்ற சேவைகளுக்கு கவரேஜ் கிடையாது.

மேலும் படிக்க

கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை? சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு!

அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதில் மாற்றம்: நிதித்துறை அதிரடி உத்தரவு!

English Summary: Health Insurance: These facilities are also available from now on! Published on: 02 November 2022, 07:59 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.