இன்றைய தினம் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை விவரங்களையும் வெளியிட்டுள்ளது.
கோடைக்காலம் முடிந்தது என கருதிய நிலையிலும் தமிழகத்தில் இன்னும் பல்வேறு இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தே காணப்படும் சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை தமிழகத்தில் அதிகப்பட்சமாக சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் 4 செ.மீ மழையும், வந்தவாசியில் 3 செ.மீ மழையும், தலைவாசல், பவானி, TVK நகர், செங்கல்பட்டில் தலா 2 செ.மீ மழையும் பெய்துள்ளது. இதைப்போல் அதிகப்பட்சமாக பாளையங்கோட்டை பகுதியில் 40.4 டிகிரி செல்சியஸ் மழை பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, பின்வரும் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
22.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 23.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
24.08.2023 முதல் 28.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.
மேலும் வானிலை தொடர்பான விவரங்களை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும் என சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
ரேசன் கடைகளில் 1 கிலோ சர்க்கரை இலவசம்- அமைச்சரவை முடிவு
தங்கத்தின் விலை இரண்டு நாளில் கிடுகிடு உயர்வு- பொதுமக்கள் அப்சட்
Share your comments