மாதம் தோறும் சம்பளம் வாங்குகிறோம்; ஆனால் மாதம் முடிவதற்கு முன்பாகவே சம்பளம் காலியாகிவிடுகிறது. இனியாவது பணத்தை சேமிக்க தொடங்குவோம் என நம்மில் பலரும் நினைப்பதுண்டு. ஆனால், அதற்கான எந்த முயற்சியையும் பலரும் எடுப்பதில்லை.
சேமிப்பு (Savings)
நீங்களும் உங்களது சேமிப்பு பயணத்தை தொடங்க வேண்டும் என விருப்பமா? அப்படியெனில், பணம் சேமிப்பை எப்படி தொடங்க வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம். சேமிப்பு என்பது ஒரே நாளில் உருவாகிவிடும் பழக்கம் அல்ல. மாறாக, தொடர் முயற்சியால் உருவாக்கப்படும் பழக்கம்.
பட்ஜெட் (Budget)
பணத்தை சேமிக்க தொடங்க வேண்டுமெனில் அதற்கான முதல் படி பட்ஜெட் போடுவதுதான். அரசுகளே ஆண்டுதோறும் பட்ஜெட் போடும்போது நாமும் பட்ஜெட் போட வேண்டியது அவசியம். நமக்கு ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பணம் வருகிறது, எவ்வளவு பணம் செலவாகிறது என்பதை தெரிந்துகொள்ளாமலேயே பணத்தை சேமிக்க முடியாது.
வீண் செலவுகள்
நமக்கு தெரியாமலேயே வீண் செலவுகள் நம் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக காலியாக்கிவிடும். எனவே, தேவையற்ற வீண் செலவுகளை கண்காணித்து குறைக்க வேண்டியது அவசியம். அதற்காக, அத்தியாவசிய செலவுகள் என்ன, வீண் செலவுகள் என்ன என்பதை கவனிக்க வேண்டும். உங்களுக்கு தேவை இல்லை என்றாலும், வெறும் ஆடம்பரத்துக்காக மட்டும் செய்யும் செலவுகள் வீண் செலவுகள். இந்த செலவுகளை குறைக்க வேண்டியது பணத்தை சேமிக்க மிக மிக அவசியம்.
முதலில் சேமிப்பு
பலரும் மாதம் தோறும் சம்பளம் வந்ததும் தங்கள் பணத்தை முதலில் செலவு செய்துவிட்டு மீதமுள்ள பணத்தையே சேமிக்கின்றனர். ஆனால், சம்பளம் வந்ததும் முதலில் பணத்தை சேமித்துவிட்டு மீதமுள்ள பணத்தை செலவு செய்வதே சிறந்தது.
முதலீடு
பணத்தை சும்மா சேமித்து மட்டும் வைத்தால் பணவீக்கத்தால் அதன் மதிப்பு குறைந்துவிடும். எனவே உங்கள் சேமிப்பை முதலீடு செய்து வைப்பதனால் பணத்தை பெருக்க முடியும்.
மேலும் படிக்க
இவர்களுக்கு மட்டும் ரூ. 2500 உதவித்தொகை: மத்திய அரசின் சூப்பர் திட்டம் விரைவில்!
மினிமம் பேலன்ஸ்: எந்த வங்கியில் எவ்வளவு தொகை பராமரிக்க வேண்டும்?
Share your comments