நிதி தவறுகள் பொருளாதார நோக்கில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, குடும்பத்தில் கணவன், மனைவி உறவையும் பாதிக்கலாம். நிதி விஷயங்கள் தொடர்பான கருத்து வேறுபாடுகள் தம்பதியர் இடையே மனக்கசப்பை உண்டாக்கலாம். நிதி பிரச்னை தொடர்பான மோதலால் விவாகரத்து வரை சென்றவர்களும் இருக்கின்றனர். கணவன், மனைவி இருவரில் ஒருவருக்கு நிதி தொடர்பான புரிதல் இல்லாத போது அல்லது அவர்கள் செயல்பாடு நிதி இலக்குகளுக்கு எதிராக அமையும் போது மோதல் ஏற்படலாம்.
நிதிப் பிரச்சனை (Economic Problems)
உரையாடல் தேவை: நிதி பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான முதல் வழி, கணவன், மனைவி இருவரும் தங்களுக்குள் வெளிப்படையாக பேசிக்கொள்வது தான். நிதி இலக்குகள் மற்றும் செலவு பழக்கங்கள் குறித்து பேசி தெளிவு காண வேண்டும். தேவையில்லாத செலவுகளை கண்டறிய வேண்டும்.
நிதி இலக்குகள்: நிதி விஷயங்கள் பற்றி பேசும் போது தயக்கத்தை கைவிட்டு, பணத்தை நிர்வகிப்பது தொடர்பான அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும். சேமிப்பு, வரி சேமிப்பு திட்டமிடல், முதலீடு, கடன்கள் ஆகியவை குறித்து பேச வேண்டும். இந்த உரையாடலில் ஓய்வு கால திட்டமிடலையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதலீடுகள் தேர்வு: குடும்பத்திற்கான நிதி இலக்குகளை தீர்மானித்த பிறகு கணவன், மனைவி அவற்றை அடைய ஒன்றாக செயல்படுவது அவசியம். சேமிப்பில் கவனம் செலுத்துவதோடு, சேமிப்பை சரியாக முதலீடு செய்ய வேண்டும். பணவீக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் முதலீடு பலன் அமைவதும் முக்கியம்.
அவசர கால நிதி: நீண்ட கால நோக்கில் சமபங்கு முதலீடு நல்ல பலனை அளிக்கும். பங்குகளில் முதலீடு செய்ய அனுபவம் இல்லை எனில், மியூச்சுவல் பண்ட் வழியை நாடலாம். தங்க சேமிப்பு பத்திரம், இ.டி.எப்., வழிகளில் தங்கத்தில் முதலீடு செய்யலாம். அவசர கால தேவைகளை சமாளிப்பதற்கான நிதியும் கைவசம் இருக்க வேண்டும்.
நிதி கல்வி: நிதி விஷயங்கள் தொடர்பாக போதிய விழிப்புணர்வு இல்லாததே தவறான முடிவுகளுக்கு காரணமாகிறது. எனவே, நிதி கல்வி பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும். சேமிப்பு, முதலீடு, நிதி பரிவர்த்தனையின் அடிப்படைகளை கணவன், மனைவி புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க
ரெப்பொ வட்டி விகிதம் உயர்வு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
கொரோனா உயிரிழப்பு இந்தியாவில் தான் அதிகம்: WHO சர்ச்சைக் கருத்து!
Share your comments