தேசிய பென்ஷன் திட்டமான என்.பி.எஸ்., கடந்த 12 ஆண்டுகளில் அதன் உறுப்பினர்களுக்கு அதிக பலன் அளித்திருப்பதாக பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
பென்ஷன் திட்டத்தின் சம பங்கு பிரிவின் கீழ், கடந்த 12 ஆண்டுகளில், 12 சதவீத பலன் அளித்துள்ளது என்றும், அரசு பத்திரங்களின் கீழ், 9.9 சதவீத அளவு பலன் கிடைத்துள்ளது என்றும் பென்ஷன் ஒழுங்குமுறை ஆணைய தலைவர் சுப்ரதீம் பாந்த்யோபாத்யா தெரிவித்துள்ளார்.
தேசிய பென்ஷன் திட்டம் (National Pension Scheme)
இந்திய தொழிலக கூட்டமைப்பின் காப்பீடு மற்றும் பென்ஷன் தொடர்பான மாநாட்டில் பங்கேற்று பேசிய பாந்த்யோபாத்யா, என்.பி.எஸ்., திட்டம் (NPS Scheme) வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டது என்றும், இதில் அதிக பலன் பெற துவக்கத்திலேயே முதலீடு செய்வது அவசியம் என்றும் தெரிவித்தார்.
ஆயிரம் ரூபாய் மட்டும் செலுத்தி இந்த கணக்கை உயிர்ப்பில் வைத்திருக்கும் வாய்ப்பில் ஏற்ற அம்சம் என்பதோடு, நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்தாமல் வாய்ப்புள்ள தொகையை செலுத்தி வரலாம் என்றும் தெரிவித்தார்.
விழிப்புணர்வு (Awareness)
பென்ஷன் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு அமைப்பு அல்லது மேடை அவசியம் என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்க
8 ரூபாய் முதலீட்டில் 17 லட்சம் வருமானம் தரும் LIC-யின் சூப்பரான பாலிசி!
Share your comments