1. மற்றவை

UPI ATM- டெபிட் கார்டுகளை தூக்கிப்போடும் நேரம் வந்தாச்சு!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Hitachi Money Spot UPI ATM withdraw money procedure

டெபிட் கார்டு இல்லாமல் மக்கள் பணம் எடுக்கும் வகையில் UPI ATM வசதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இனி வருங்காலங்களில் இந்தியா முழுவதும் டெபிட் கார்டு ஏடிஎம் பயன்பாடு முற்றிலும் இல்லாமல் போகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

பணப்புழக்கம் அதிகரித்த நிலையில் வங்கிகளின் செயல்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது மட்டுமில்லாமல் புதிய தொழில்நுட்ப முறைகளும் வங்கி தொடர்பான பணிகளில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தான் தற்போது அறிமுகமாகியுள்ளது கார்ட்லெஸ் கேஷ் (cardless cash) எனப்படும் UPI ATM வசதி.

தற்போது, பல வங்கிகள் ஃபிசிக்கல் கார்டைப் பயன்படுத்தாமல் பணத்தை எடுக்க அனுமதிக்கின்றன, மேலும் UPI-ATM அதையே தான் செய்கிறது. ஆனால் ஒரு வித்தியாசம் இருக்கிறது. கார்டு இல்லாமல் பணம் எடுக்க உங்கள் மொபைலையும், சிறப்புக் குறியீட்டையும் (OTP- one time password) பயன்படுத்துகிறீர்கள். ஆனால் UPI ATM-ல் பணம் எடுப்பதற்கு, டிஜிட்டல் பேமெண்ட் முறையில் QR குறியீடுகளை ஸ்கேன் செய்தால் போதும்.

ஹிட்டாச்சி அறிமுகப்படுத்தியுள்ள UPI-ATM ஆனது வழக்கமான ஏடிஎம் இயந்திரம் போன்றது தான் ஆனால் சற்று வித்தியாசமானது. பொதுவாக, உங்கள் வங்கியில் இருந்து பணம் எடுக்க விரும்பினால், ஏடிஎம்மில் டெபிட் அல்லது கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவீர்கள். ஆனால் இதற்கு உங்களது கார்டு தேவையில்லை. இந்த ஏடிஎம் இயந்திரத்தினை "ஹிட்டாச்சி மனி ஸ்பாட் UPI ஏடிஎம்" என்று அழைக்கிறார்கள். மேலும் செப்டம்பர் 5, 2023 அன்று மும்பையில் நடந்த குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட்டில் பொது மக்களுக்கு இது எப்படி செயல்படும் என்பதை விளக்கிக் காட்டினார்கள்.

UPI ஏடிஎம்மை நீங்கள் எப்படிப் பயன்படுத்துவது என்பதை பின்வரும் வழிமுறைகள் மூலம் தெரிந்துக் கொள்ளுங்கள்.

-நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம், ஏடிஎம்மில் இருந்து எவ்வளவு பணம் எடுக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். இது நீங்கள் பணமாக பெறும் தொகை.

-நீங்கள் தொகையைத் தேர்ந்தெடுத்த பிறகு, ஏடிஎம் அதன் திரையில் ஒரு சிறப்புக் குறியீட்டைக் (QR code) காண்பிக்கும்.

-UPI (United Payments Interface)-ஐ ஆதரிக்கும் மொபைல் ஃபோன் செயலியைப் பயன்படுத்த வேண்டும். உங்கள் மொபைலில் ஏற்கனவே உள்ள பேமெண்ட் ஆப்ஸில் ஏதேனும் இருக்கலாம். (உதாரணத்திற்கு BHIM)

-உங்களது மொபைல் ஆப் மூலம், ATM திரையில் காட்டப்படும் QR குறியீட்டை ஸ்கேன் செய்யுங்கள். நீங்கள் எவ்வளவு பணம் எடுக்க விரும்புகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள இந்தப் படிநிலை ATM-க்கு உதவுகிறது.

-பரிவர்த்தனை பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்த, உங்கள் UPI பயன்பாட்டில் சிறப்பு பின்னை உள்ளிடும்படி கேட்கப்படுவீர்கள். ரகசிய பின் குறியீட்டினை நீங்கள் உள்ளிட வேண்டும்.

-நீங்கள் சரியான பின்னை உள்ளீட்டு பரிவர்த்தனையை அங்கீகரித்த பிறகு, நீங்கள் கேட்ட பணத்தை ஏடிஎம் உங்களுக்கு வழங்கத் தொடங்கும். நீங்கள் இப்போது உங்கள் பணத்தை எடுத்து உங்களுக்குத் தேவையானவற்றுக்குப் பயன்படுத்தலாம்.

இனி நீங்கள், உங்கள் பர்ஸினையோ அல்லது டெபிட் கார்டினையோ வீட்டிலேயே விட்டுவிட்டீர்கள் என்றால் கூட எளிதாக பணம் எடுக்க இயலும். பயனர்கள் தங்கள் UPI ஐடியைப் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களிலிருந்து பணத்தை எடுக்கலாம்.

மேலும் காண்க:

கடைசி சான்ஸ்- இலவசமாக ஆதார் அப்டேட் பண்ண இதை செய்யுங்க

என் விதியை நானே எழுதுறேன்- பெண் விவசாயி ராமாவின் வெற்றிக் கதை

English Summary: Hitachi Money Spot UPI ATM withdraw money procedure Published on: 07 September 2023, 02:23 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.