1. மற்றவை

கொரோனா ஏற்பட்ட பிறகு ஆன்டிபாடிகள் எத்தனை நாள் உங்களை பாதுகாக்கும்?

T. Vigneshwaran
T. Vigneshwaran
Covid-19 Antibodies
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன உளைச்சல் வார்த்தைகளால் சொல்ல முடியாதது. ஒரு முறை கொரோனா நோய் ஏற்பட்டு குணமாகிவிட்டால், நோய்க்கு எதிராக உடலில் உருவாகும் ஆண்டிபாடிக்கள் எத்தனை நாட்கள் உடலில் இருந்து மீண்டும் கொரோனா தொற்று பாதிக்காமல் காப்பாற்றும் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.

ஆண்டிபாடிக்கள் என்றால் என்ன? நோய்க்கூறு உடலில் நுழைந்துவிட்டால், உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் போதுமானதாக இல்லாதபோது நோயை எதிர்த்துப் போராடுவதற்காக உடல் தானாக ஆன்டிபாடிகளை உருவாக்கும்.

இத்தாலியின் ஒரு நகரத்தில் வசிக்கும் அனைவருக்கும் செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு உடலில் ஏற்படும் ஆண்டிபாடிக்கள் குறித்த ஆச்சரியமான தகவல் வெளிவந்துள்ளது.

படுவா பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் 2020 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இந்த ஆய்வை நடத்தினர்.

இத்தாலி வோ (Vo) என்ற நகரில் வசிக்கும் 3000 பேரில் 85 சதவீதத்திற்கும் அதிகமானவர்களிடையே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.  கோவிட் -19 நோயை ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸ் நோய்த் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களிடம் மீண்டும் 2020 மே மற்றும் நவம்பர் மாதங்களில் ஆண்டிபாடி சோதனைகளை மேற்கொண்டனர்.

பிப்ரவரி-மார்ச் மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 98.8 சதவித மக்களுக்கு நவம்பர் மாதத்தில் பரிசோதனை செய்யப்பட்டபோது, அவர்களின் உடலில் ஆண்டிபாடிக்கள் இருந்தன.

அறிகுறிகளுடன் கொரோனா வைரஸ் பாதித்தவர்களும், அறிகுறி இல்லாமலேயே கோவிடால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று நேச்சர் கம்யூனிகேஷன் மருத்துவ சஞ்சிகையில் (Nature Communications) ஆய்வு தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

ஆனால் ஒவ்வொருவருக்கும் ஆன்டிபாடியின் அளவுகள் மாறுபடுகின்றன, சில நேரங்களில் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன என்பது இந்த ஆய்வில் காணப்பட்டது. இதன் பொருள் ஆண்டிபாடிக்கள் சுமார் ஒன்பது மாதம் வரை உடலில் இருந்தாலும் அதன் அளவுகள் மாறுபடும்.

அதிகமானவர்களுக்கு ஏற்பட்ட கொரோனா நோய்த் தொற்று பலருக்கு ஏற்படவில்லை. அதாவது பிறருக்கு பரவவில்லை. சிலருக்கு ஏற்படும் கொரோனா பாதிப்பு தான் பலருக்கு பரவுகிறது என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டது. இது, நோய்த் தொற்றுடைய ஒருவர் மற்றவர்களை எவ்வாறு பாதிக்கலாம் என்பதில் உள்ள மிகப்பெரிய வேறுபாடுகளைக் காண்பிக்கிறது.

தொற்று நோய்க் கட்டுப்பாட்டுக்கு மனிதர்களின் செயலே அடிப்படையாக அமைகிறது என்று கூறும் இந்த ஆராய்ச்சி, உடல் ரீதியான தொலைவு அதாவது ஒருவர் மற்றவருடன் கடைபிடிக்கும் சமூக இடைவெளி முக்கியமானது என்று கூறுகிறது.

பிறருடன் கொள்ளும் தொடர்புகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துதல் மற்றும் முகக்கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே நோய்த்தொற்றை கட்டுப்படுத்த சூத்திரமாகும்.

மேலும் படிக்க:

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் இணையதளத்தில் பதிவிறக்கம்:

IRCTC: ரயில்வேயின் அதிரடி திட்டம் !வீட்டில் இருந்து மாதம் 1 லட்சம்! இதோ விவரம்!

கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக அழைப்பு!

English Summary: How many days will antibodies protect you after a corona has occurred? Published on: 22 July 2021, 11:52 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.