பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் (PACKAGED DRINKING WATER) தரம் குறித்து உணவு பாதுகாப்புத் துறைக்கு பல்வேறு புகார்கள் வரப்பெற்றுள்ளது. மேலும் தரமற்ற குடிநீரை அருந்துவதால் காலரா, டைபாய்டு, அமீபியாசிஸ், வயிற்றுபோக்கு, E. Coli தொற்று ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது.
உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் - 2006 மற்றும் 2.10.8 of FSS (Food Products Standards and Food Additives) Regulations, 2011 - ன் படி PACKAGED DRINKING WATER -ன் தரம் வரையறுக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகள் (Rules)
PACKAGED DRINKING WATER - ல் PH - 6 to 8.5, Total dissolved solids - 500 mg / litre, Turbidity - 2 NTU, Calcium - 20 to 75 mg / litre, Magnesium - 10 to 30 mg / litre, Sodium - 200 mg / litre, Chloride - 200 ml / litre Total pesticide residue - Not more than 0.005 mg / litre ஆகிய அளவுகளும் Coliform bacteria, Faecal Streptococci, Yeast and mould, Salmonella and Shigella, Vibrio Cholera ஆகிய நுண்கிருமிகள் இல்லாமலும் இருக்க வேண்டும். மேற்படி பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர் (PACKAGED DRINKING WATER) -ல் மேற்கூறிய தரங்கள் குறைவாக இருப்பின் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் - 2006 - ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
உரிமம் (Licence)
PACKAGED DRINKING WATER - உற்பத்தி செய்யும் அனைத்து தயாரிப்பு நிறுவனங்களும் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் மற்றும் Bureau of Indian Standards (BIS) - ல் வழங்கப்படும் உரிமம் ஆகியவை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். PACKAGED DRINKING WATER தயாரிப்பு நிறுவனங்களில் ஆரம்பம் முதல் இறுதி நிலை வரை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் - 2006 மற்றும் ஒழுங்குமுறைகள் - 2011 - ல் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.
குறிப்பாக 20 லிட்டர் கேன்களில் லேபிள்கள் தெளிவாக ஒட்டப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் குடிநீர் நிரப்பும் முன்பு கேன்கள் நன்கு கழுவி சுத்தம் செய்யப்பட வேண்டும். PACKAGED DRINKING WATER - உற்பத்தியின் போது அதன் தரம் குறித்து ஆய்வு செய்த பின்பே நுகர்வோர் பயன்பாட்டிற்கு விநியோகம் செய்ய வேண்டும்.
உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகள் விதிகளின் படி கேன்களின் மீதுள்ள லேபிள்களில் உணவு பாதுகாப்பு துறையின் உரிம எண், BIS - ஆல் வழங்கப்பட்ட உரிம எண், தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் மற்றும் முழுமையான முகவரி, நிகர எடை, லாட் / கோடு / பேட்ஜ் எண், தயாரிப்பு தேதி, பயன்படுத்த கூடிய கால அளவு உள்ளிட்ட விபரங்கள் இடம் பெற வேண்டும்.
பொதுமக்கள் PACKAGED DRINKING WATER - ஐ கடைகளில் வாங்கும் பொழுது மேற்குறிப்பிட்ட விபரங்கள் உள்ளதா? என சரிபார்த்து வாங்க வேண்டும்.
PACKAGED DRINKING WATER மற்றும் உணவுப் பொருட்களில் உள்ள குறைபாடுகள் குறித்து 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அல்லது unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் அளிக்கலாம்.
மேலும் படிக்க
பசுமைக் காகிதத்திற்கு மவுசு கூடுகிறது: சுற்றுச்சூழலும் காக்கப்படுகிறது!
கேன் குடிநீர் தரமாக இல்லையா?புகார் அளிக்க இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்!
Share your comments