மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கடந்த 6 மாதங்களாகவே பல புதிய சேமிப்புத் திட்டங்களை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி வருகின்றன. அதில் மிகவும் பிரபலமான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமான ஐசிஐசிஐ ப்ரெடெண்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் ஹவுஸ் ஆட்டோ இண்டெக்ஸ் ஃபண்டை (Auto Index Fund) அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆட்டோ இண்டெக்ஸ் ஃபண்ட் (Auto Index Fund)
ஆட்டோ இண்டெக்ஸ் ஃபண்ட் தற்சமயம் சந்தா செலுத்துகைகளுக்காக இன்று திறக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தா செலுத்துகைகளுக்கான கடைசி நாள் அக்டோபர் 6 ஆகும். இந்த வகையில் நிஃப்டி ஆட்டோ இண்டெக்ஸ் ஃபண்டானது நிதிச் சந்தையின் ஆட்டோமொபைல் பிரிவின் நடத்தை மற்றும் செயல்திறனைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது நிஃப்டி 500 ஐ கவனிக்கும். இண்டெக்ஸ் ஃபண்டிற்கான மறுசீரமைப்பு விதிகள் செப்டம்பரில் மாறியுள்ளதை அடுத்து எந்த ஒரு பங்கும் 33% க்கும் அதிகமாகவும், முதல் 3 பங்குகளின் மொத்த எடை 62% க்கும் அதிகமாகவும் இருக்கக்கூடாது.
ஃபண்ட் ஹவுஸின் கூற்றுப்படி, இந்த ஃபண்ட் தனிநபர் வருமானத்தை உயர்த்த வேண்டும் எனவும், வாகனத் தொழிலை வளர்க்கும் மற்றும் மேம்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி EV சந்தை 2022-2030 க்கு இடையில் 49% CAGR இல் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் 2030 ஆம் ஆண்டில் 10 மில்லியன் யூனிட் வருடாந்திர விற்பனையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவை ஒரு உலகளாவிய உற்பத்தி மையமாகவும் ஒரு ஆராய்ச்சி மையமாகவும் மேம்படுத்துவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளதால் இந்த ஃபண்ட் கண்டிப்பாக லாபம் தரும் எனவும் ஃபண்ட் ஹவுஸ் கூறியுள்ளது.
Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.
மேலும் படிக்க
500 ரூபாய் இருந்தால் போதும்: வீட்டிலிருந்தே ஈஸியா 1 லட்சம் சம்பாதிக்கலாம்!
Share your comments